ஷோயப் அக்தரின் கிரிக்கெட் வாழ்க்கையைக் காப்பாற்றிய ஜக்மோகன் டால்மியா: 2000-01-லேயே  முடிந்திருக்கும்

ஷோயப் அக்தரின் கிரிக்கெட் வாழ்க்கையைக் காப்பாற்றிய ஜக்மோகன் டால்மியா: 2000-01-லேயே  முடிந்திருக்கும்
Updated on
1 min read

2000-01-லேயே பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரும் ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ என்று செல்லமாக அழைக்கப்படுபவருமான ஷோயப் அக்தரின் கிரிக்கெட் வாழ்க்கை 200-01-லேயே முடிந்திருக்கும், ஜக்மோகன் டால்மியா மட்டும் இல்லையெனில் அன்றே அவர் முடிந்திருப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் தாகிர் ஜியா தெரிவித்தார்.

ஷோயப் அக்தர் பவிலிங் செய்யவில்லை கையை மடக்கி விட்டு எறிகிரார் என்று அவர் மீது பல அணிகளும் புகார் தெரிவித்தன, ஆனால் அப்போது, “ஐசிசி தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியா அக்தருக்கு ஆதரவாக நின்றார். ஐசிசி உறுப்பினர்கள் அக்தரின் ஆக்‌ஷன் விதிமீறலானது என்பதில் பிடிவாதமகா இருந்தனர்.

டால்மியா அன்று எடுத்த முடிவினால் அக்தர் பிழைத்தார். அவருக்கு மருத்துவ ரீதியான கோளாறு இருப்பதாக ஐசிசி தெரிவித்து அக்தரை விளையாட அனுமதித்தது. எனவே ஜக்மோகன் டால்மியா அன்று ஐசிசி தலைவராக அக்தருக்கு உதவவில்லை எனில் அவரது கிரிக்கெட் வாழ்க்கை 2000-01-லேயே முடிந்திருக்கும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in