

2018-19 ஆஸ்திரேலியா தொடரிலும் சரி பிற தொடர்களிலும் சரி இந்திய கேப்டன் விராட் கோலியை ஐபிஎல் பணமழை ஒப்பந்தங்களின் பயன்களுக்காக ஸ்லெட்ஜிங் செய்ய ஆஸ்திரேலிய வீரர்கள் அஞ்சினர் என்று ஒரு வெடிகுண்டைப் போட்டார்.
இதனையடுத்து கிரிக்கெட் உலகம் ‘பத்த வச்சுட்டயே பரட்ட’ என்ற தொனியில் கிளார்க்கைப் பார்க்க, ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் அவருக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
“எனக்கு அப்படித் தெரியவில்லை, அதிக வீரர்கள் விராட் கோலியிடம் ‘நைஸ்’ ஆக நடந்து கொண்டதாக நான் கருதவில்லை, அவரை அவுட் ஆக்க முயற்சிக்காமல் இல்லை.
ஒவ்வொரு முறைக் களமிறங்கும் போதும் நாங்கள் ஆஸ்திரேலியா வெற்றி பெறவே ஆடுகிறோம். யார் கோலியிடம் நைசாக நடந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.
அவரைச் சீண்டினால் அவரிடம் உள்ள சிறந்த ஆட்டம் வெளிப்படும் என்பதற்காக கொஞ்சம் அடக்கி வாசித்தோம் அவ்வளவே. மேலும் எனக்கு ஐபிஎல் ஒரு பெரிய விஷயமல்ல. எனவே நான் எதையும் இழக்கவில்லை.
விராட் கோலிக்கு பவுலிங் போடும் போது ஐபிஎல் ஒப்பந்தங்களை நினைத்துக் கொண்டு யாரும் வீசவில்லை என்பதை உறுதியுடன் கூற முடியும்” என்றார் டிம் பெய்ன்.