Last Updated : 17 Aug, 2015 09:46 AM

 

Published : 17 Aug 2015 09:46 AM
Last Updated : 17 Aug 2015 09:46 AM

மான்ட்ரியால் மாஸ்டர்ஸ்: செரீனாவை வீழ்த்தினார் பெலின்டா பென்சிச்- ஆடவர் இறுதியில் ஜோகோவிச்- முர்ரே மோதல்

மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் (ரோஜர் கோப்பை) டென்னிஸ் போட் டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸைத் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி யுள்ளார் ஸ்விட்சர்லாந்தின் பெலின்டா பென்சிச். ஆடவர் பிரிவு இறுதிப் போட்டிக்கு செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் ஆன்டி முர்ரே தகுதி பெற்றுள்ளனர்.

கனடாவின் மான்ட்ரியால் நகரில் நடைபெற்று வரும் ரோஜர் கோப்பை போட்டியின் மகளிர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், உலகின் முதல் நிலை வீராங்கனையும், 21 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், ஸ்விட்சர் லாந்தின் பெலின்டா பென்சிச்சை சந்தித்தார். 18 வயதே ஆன பென்சிச்சுக்கு எதிரான முதல் செட்டை 3-6 என்ற கணக்கில் வென்றார் செரீனா.

ஆனால், தரவரிசையில் 5-வது இடத்திலுள்ள அனா இவானோ விச்சையும், 6-வது இடத்திலுள்ள கரோலின் வோஸ்னியாகியையும் வீழ்த்தி அரையிறுதிக்கு வந்த பென்சிச் அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுத்துவிடவில்லை.

அடுத்த செட்டை 7-5 எனப் போராடிக் கைப்பற்றினார். வெற்றியை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் பென்சிச் ஆதிக்கம் செலுத்தினார். அந்த செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி, செரீனாவை போட்டியிலிருந்து வெளியேற்றினார். இதன்மூலம் இறுதிப்போட்டிக்குள் நுழைந் துள்ளார் பென்சிச்.

“எனது ஃபோர்ஹேண்ட் ஷாட் களும், செரீனாவால் அதனை எதிர்கொள்ள முடியதாதும் என்னை மகிழ்ச்சியடையச் செய்துள்ளன. மிக அற்புதமான உணர்வு இது. இதை விவரிக்க வார்த்தைகள் இல்லை” என தனது வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ளார் பென்சிச்.

ஷரோபோவா தனது 17-வது வயதில் 2004 விம்பிள்டன் இறுதிப்போட்டியில் செரீனாவை வீழ்த்தினார். அதன்பிறகு மிக இளம் வயதில் செரீனாவை வீழ்த்திய பெருமையைப் பெற்றுள்ளார் பென்சிச்.

“அவர் விட்டுக்கொடுக்காமல் மிகக் கடுமையாகப் போராடினார்” என செரீனா தெரிவித்துள்ளார். போட்டியின்போது 12 டபுள் ஃபால்ட்களை செய்தார் செரீனா. 2-வது செட்டில் டபுள் ஃபால்ட் செய்து 5-3 எனப் பின்தங்கிய போது, தனது பேட்டை வீசியெறிந்து ஆற்றாமையை வெளிப்படுத்தினார்.

இறுதிப்போட்டி

மற்றொரு அரையிறுதியில் இத்தாலியின் சாரா எர்ரானியை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்திய ருமேனியாவின் சைமோனா ஹேலப்பும், பென்சிச்சும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளனர்.

ஜோகோவிச்- முர்ரே

ஆடவர் இறுதிப்போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், பிரிட்டனின் ஆன்டி முர்ரே மோதுகின்றனர்.

முதன்முதலாக ரோஜர்ஸ் கப் அரையிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸின் ஜெர்மி சார்டியை சந்தித்தார் ஜோகோவிச். இப்போட் டியை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று முடிவுக்குக் கொண்டு வந்தார் ஜோகோவிச்.

மற்றொரு அரையிறுதியில் ஜப்பானின் நிஷிகோரியை வீழ்த்தினார் பிரிட்டனின் ஆன்டி முர்ரே. இதில், நிஷிகோரியை 6-3, 6-0 என்ற கணக்கில் மிக எளிதில் வீழ்த்தினார் முர்ரே.

சானியா ஜோடி தோல்வி

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி அரையிறுதியில் தோற்று வெளியேறியது.

போட்டித் தரவரிசையில் முதலி டத்தில் உள்ள சானியா ஜோடி, 4-வது இடத்தில் இருக்கும் பிரான்ஸின் கரோலின் கிரேஸியா-ஸ்லோவேனியாவின் கேத்தரினா போட்னிக் ஜோடியை எதிர் கொண்டது. இதில், 3-6, 2-6 என்ற நேர் செட்களில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி தோல்வியடைந்தது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x