10,000 பேருக்கு இலவச உணவு: கொல்கத்தா இஸ்கான் மையத்தை ‘கேப்டன்’ ஆக வழிநடத்தும் கங்குலி நன்கொடை அளித்து உதவி

இஸ்கான் ஊழியர்களுடன் சவுரவ் கங்குலி.
இஸ்கான் ஊழியர்களுடன் சவுரவ் கங்குலி.
Updated on
1 min read

கொல்கத்தா இஸ்கான் மையத்தின் மூலம் மேலும் 10,000 பேருக்கு இலவச உணவு வழங்க பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய கேப்டனுமான கிரிக்கெட் வீரர் தாதா கங்குலி நன்கொடை வழங்கி உதவி புரிந்துள்ளார்.

முன்னதாக தினமும் 10,000 ஏழை எளியவர்களுக்கு கொல்கத்தா இஸ்கான் இலவச உணவு வழங்கி வந்தது இந்நிலையில் மேலும் 10,000 பேருக்கு உணவு வழங்க கங்குலி உதவிபுரிந்ததையடுத்து தினமும் 20,000 பேர்களுக்கு உணவு வழங்குவோம் என்று இஸ்கான் தெரிவித்துள்ளது.

முன்னதாக ராமகிருஷ்ணா மடத்துக்கு கங்குலி 20,000 கிலோ அரசி வழங்கி உதவினார்.

இதனையடுத்து இஸ்கான் கங்குலிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் கூறும்போது, “கரோனாவுக்கு எதிரான நீண்ட டெஸ்ட் போட்டியில் கங்குலி கேப்டன்சியில் பசியுடனும் பட்டினியுடனும் போராடும் பலருக்கு உதவி வழங்கி நோயின் விளைவுகளை எதிர்த்து போராடுகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in