

ஐபிஎல் ஏலத்தில் மிகப்பெரிய தொகையான ரூ.15.50 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினால் ஏலம் எடுக்கப்பட்ட பாட் கமின்ஸ் உலகில் எல்லாம் சரியாக இருந்தால் தன் பேராசைக்கு பணமழை ஐபிஎல் நடப்பதையே விரும்புவேன் என்று கூறியுள்ளார்.
“என்னுடைய ஒப்பந்தத் தொகைக் குறித்து யோசிக்கிறேன்ம் ஆம், எப்போது தொடர்கள் நடக்க ஆரம்பிக்கும் என்று யோசித்து வருகிறேன். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பற்றி 2-3 ஆண்டுகளாகவே பேசி வருகிறோம்.
ஆஸ்திரேலிய சொந்த மண்ணில் உலகக்கோப்பையில் ஆடுவதை பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். 2015ம் ஆண்டு 50 ஒவர் உலகக்கோப்பை எனக்கு ஹைலைட்ஸாக முடிந்தது என்னால் இறுதியில் கூட ஆட முடியவில்லை.
எனவே டி20 உ.கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற வேண்டும். இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய தொடர் அதுதான். எனவே அது நடப்பதை மிகவும் விரும்புகிறேன்.
அனைத்தும் சரியாக இருக்கும் துல்லியமான ஒரு உலகில் நான் பேராசையுடன் ஐபிஎல் நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் நாம் பொறுத்திருந்து பார்ப்போம். டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம்தான் சிறந்தது ஆனால் இப்போது எதுவும் நம் கையில் இல்லை என்ற நிலை உள்ளது. பார்ப்போம்” என்றார் பாட் கமின்ஸ்.