

மக்களிடத்தில் தன்னம்பிக்கை ஊட்டும் நேர்மறை விஷயங்களைக் கொண்டு சேருங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் விளையாட்டு வீரர்களைக் கேட்டுக் கொண்டார்.
அந்த வீடியோ கான்பரன்சிங்கில் சச்சின் டெண்டுல்கர் பிரதமரிடம், கரோனா லாக்-டவுன் முடிந்து ஏப்ரல் 14க்குப் பிறகு எப்படி நிர்வகிக்கப் போகிறோம், சமாளிக்கப்பொகிறோம் என்பது தான் முக்கியமானது என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடியுடன் மேற்கொண்ட ஒரு மணி நேர விடியோ கான்பரன்சிங்கில், சச்சின் டெண்டுல்கர் பிறகு தான் பிரதமருடன் பேசியது பற்றி தெரிவிக்கையில்,
“ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகான காலக்கட்டம் கோவிட்-19க்கு எதிரான போரில் நமக்கு முக்கியமான காலக்கட்டமாகும். 14ம் தேதிக்குப் பிறகு நம் பாதுகாப்பை கைவிட்டு விடக்கூடாது அந்தக் காலக்கட்டத்தை எப்படி மேலாண்மை செய்யப்போகிறோம் என்பதுதான் முக்கியம் என்ற என் கருத்தை பிரதமர் மறு உறுதி செய்தார்.
மேலும் நாங்கள் பேசிய போது உடல் ரீதியான ஆரோக்கியத்துடன் மனரீதியான ஆரோக்கியமாக இருப்பதும் முக்கியம் என்று பேசினோம், நான் வீட்டில் என்னமாதிரியான பயிற்சிகளை மேற்கொள்கிறேன் என்று பேசினேன். விளையாட்டுப் போட்டிகளில் எப்படி டீம் ஸ்பிரிடி நம்மை வெற்றிக்கு இட்டுச் செல்கிறதோ அதேபோல் நாம் அனைவரும் இந்தக் காலக்கட்டத்தில் ஒரு தேசமாக டீம் ஸ்பிரிட்டுடன் ஒரு அணியாகத் திரண்டு தேசமே கோவிட்-19க்கு எதிராகப் போரிட்டு அதனை வெல்ல வேண்டும்” என்று பேசினோம்” என்றார்.