

கடைசி நியூஸிலாந்து தொடர் நீங்கலாக 3 வடிவங்களிலும் பிரமாதமாக ஆடி வரும் விராட் கோலி , 12 ஆண்டுகளுக்கு முன்பு யாராவது தன்னிடம் வந்து இவ்வாறு கூறினால் ‘பேசாமல் போயிடு’ என்று கூறியிருப்பேன் என்று ஒரு ஜாலி மூடில் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இங்கிலாந்து பேட்டிங் நட்சத்திரம் கெவின் பீட்டர்சனுடன் இன்ஸ்டாகிராமில் அரட்டை அடித்த விராட் கோலியிடம் பீட்டர்சன், ‘கிரிக்கெட்டில் சிறப்பாக விளங்குவது பற்றியும், இந்த அளவுக்கு வர முடியும் என்று கோலி யோசித்தாரா என்றும் கேட்டார் அதற்கு விராட் கோலி
“இல்லை. 12 ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் யாராவது வந்து நான் இப்படி வருவேன் என்று கூறியிருந்தால் அவரிடம் நான் ‘பேசாமல் போயிடு’ என்றே கூறியிருப்பேன்” என்றார்.
டெஸ்ட் போட்டிகளில் கோலி 7,240 ரன்களை 86 போட்டிகளில் 53.62 என்ற பிரமாதமான சராசரியில் எடுத்துள்ளார், டி20யில் 82 போட்டிஅக்ளில் 2,794 ரன்கள் சராசரி 50.80. ஒருநாள் கிரிக்கெட்டில் கேட்கவே வேண்டாம் 10,000, 11,000 மைல்கல்லை வேகமாக எட்டி சாதனை படைத்தவர்.
கெவின் பீட்டர்சன் உங்களுக்கு பிடித்த தருணம் எது என்று கேட்டார், அதற்குக் கோலி, “இந்த நாளில் என்னை நீங்கள் அரட்டைக்கு அழைத்துள்ளீர்கள் இதே நாள்தான் நாங்கள் உலகக்கோப்பையை வென்ற நாள், (2011), என் வாழ்வில் இது ஒரு சிறப்பு வாய்ந்த நாள்” என்றார்
அதே போல் தன் செல்லப்பெயர் ‘சிகு’ என்பதை பிரபலப்படுத்தியவர் தோனிதான் அவர் இப்படித்தான் தன்னை களத்தில் அழைப்பார் என்றார்.