லாக்-டவுன் டயரி: பூம்பூம் சமைரா- பும்ராவின் விசிறியான ரோஹித் சர்மா மகள்: பும்ரா பகிர்ந்த வீடியோ

லாக்-டவுன் டயரி: பூம்பூம் சமைரா- பும்ராவின் விசிறியான ரோஹித் சர்மா மகள்: பும்ரா பகிர்ந்த வீடியோ
Updated on
1 min read

ரோஹித் சர்மாவின் மகள் சமைரா இந்திய வேகப்பந்து வீச்சாளரும் உலகிலேயே தனித்துவமானதும் எளிதில் பின்பற்ற முடியாததுமான பவுலிங் ஆக்‌ஷனைக் கொண்ட பும்ராவின் ஆக்‌ஷன் போன்றே செய்து காட்டிய வீடியோவை பும்ரா பகிர்ந்துள்ளார்.

21 நாட்கள் லாக்-டவுனி கிரிக்கெட் வீரர்கள் பலரும் சுவாரசியமான வீடியோக்களை தங்கள் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களி பகிருவதோடு தங்களிடையே உரையாடியும் வருகின்றனர்.

இந்நிலையில் ரோஹித் சர்மாவின் பெண் குழந்தை சமைரா பும்ரா வீசுவது போலவே செய்து காட்டிய வீடியோவை பகிர்ந்த பும்ரா, “சமைரா என்னவிடவும் என் ஆக்‌ஷனை நன்றாகச் செய்கிறார், அவள் என் விசிறி என்பதை விட நான் தான் அவளுடைய விசிறி” என்று வாசகத்தையும் பதிவிட்டுள்ளார்.

ரோஹித் சர்மாவும் பும்ராவும் இன்ஸ்டாகிராமில் லைவ் ஆக உரையாடினர். இதில் பும்ராவும் ஷர்மாவும் பல விஷயங்களைப் பேசினர்.

அதில் ரோஹித் சர்மா தன் மகள் சமைரா பற்றி கூறும்போது, “அவள் முதன் முதலில் ஒரு கிரிக்கெட் செயலைப் புரிந்தாள் என்றால் அது உன்னுடைய பவுலிங் ஆக்ஷன் போல் செய்ததுதான்” என்றார், அதற்கு பும்ரா கலகலப்பாக, “அவள் நல்ல பவுலரைத் தேர்ந்தெடுதிருக்கிறாள்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in