வாஷிங்டன் ஓபன்: இறுதிச்சுற்றில் நிஷிகோரி

வாஷிங்டன் ஓபன்: இறுதிச்சுற்றில் நிஷிகோரி
Updated on
1 min read

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பானின் நிஷிகோரி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி யுள்ளார்.

அமெரிக்க தலைநகர் வாஷிங் டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் அரையிறுதியில் நிஷிகோரி 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் குரேஷியாவின் மரின் சிலிச்சை தோற்கடித்தார்.

இதன்மூலம் கடந்த அமெரிக்க ஓபன் இறுதிச்சுற்றில் மரின் சிலிச்சிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளார் நிஷி கோரி. சர்வதேச தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் நிஷிகோரி, இதுவரை சிலிச்சுடன் 9 முறை மோதியுள்ளார். அதில் 6 வெற்றிகளையும், 3 தோல்வி களையும் பதிவு செய்துள்ளார்.

வெற்றி குறித்துப் பேசிய நிஷிகோரி, “சிலிச்சுக்கு பதிலடி கொடுத்திருப்பது மிகச்சிறப் பானது. இன்றைய (நேற்றைய) ஆட்டத்தில் சிலிச்சைவிட சிறப் பாக ஆடினேன். தொடர்ந்து இதே போன்று சிறப்பாக ஆடுவேன் என நம்புகிறேன்” என்றார்.

இறுதிச்சுற்றில் அமெரிக்கா வின் ஜான் இஸ்னரை சந்திக் கிறார் நிஷிகோரி.

இஸ்னர் தனது அரையிறுதியில் 6-3, 3-6, 7-6 (9) என்ற செட் கணக்கில் சகநாட்டவரான ஸ்டீவ் ஜான்சனை தோற்கடித்தார். இதில் 31 ஏஸ் சர்வீஸ்களை பறக்கவிட்ட இஸ்னர், மூன்று முறை ‘மேட்ச் பாயிண்ட்டை’ மீட்டார்.

இதற்கு முன்னர் நிஷிகோரியும், இஸ்னரும் ஒரு முறை மட்டுமே மோதியுள்ளனர். 4 மாதங்களுக்கு முன்பு மியாமி ஓபன் காலிறுதியில் இருவரும் மோதினர். அதில் நிஷிகோரியை இஸ்னர் தோற் கடித்தது குறிப்பிடத்தக்கது.

அது தொடர்பாக பேசிய இஸ்னர், “அப்போது எல்லா விஷயங்களும் எனக்கு சாதகமாக அமைந்தன. நான் மிக நன்றாக விளையாடினேன். இந்த ஆண்டில் அதுதான் என்னுடைய சிறந்த ஆட்டம். அதேபோன்று இறுதி ஆட்டத்திலும் நான் வெற்றி பெற வாய்ப்புள்ளது” என்றார்.

கடந்த வாரம் அட்லாண்டா ஒபனில் சாம்பியன் வென்ற இஸ்னர், நிஷிகோரியை வீழ்த்தும்பட்சத்தில் தனது 11-வது ஏடிபி பட்டத்தை வெல்வார். மாறாக நிஷிகோரி வெற்றி பெறும்பட்சத்தில் இது அவருடைய 10-வது ஏடிபி பட்டமாக அமையும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in