Published : 02 Apr 2020 12:46 PM
Last Updated : 02 Apr 2020 12:46 PM

டக்வொர்த் லூயிஸ் கணக்கீட்டு முறையை உருவாக்கிய டோனி லூயிஸ் மரணம்

கணிதவியலாளர் டக்வொர்த் உடன் இணைந்து கிரிக்கெட்டில் இன்று பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபல டக்வொர்த் லூயிஸ் கணக்கீட்டு முறையை உருவாக்கிய டோனி லூயிஸ் காலமானார். இவருக்கு வயது 78.

சர்ச்சைக்குரிய முறையாக இருந்தாலும் கிரிக்கெட்டில் இதற்கு இணையான ஒரு கணக்கீட்டு முறை இல்லை என்பதே பல வல்லுநர்களின் கருத்தாக இருந்து வருகிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இவரது மறைவுக்கு இரங்கல் வெளியிட்டுள்ளது.

டக்வொர்த் என்ற கணிதவியல் நிபுணருடன் இணைந்து டோனி லூயிஸ் என்பவர் 1997-ல் உருவாக்கியதுதான் டக்வொர்த் லூயிஸ் முறை பிரபலமாக டி.எல். என்று அழைக்கப்படுகிறது.

இதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி 1999ம் ஆண்டு அதிகாரபூர்வமாக தனதாக்கிக் கொண்டு மழை உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் கிரிக்கெட் ஆட்டங்கள் குறிப்பாக ஒருநாள், டி20 போட்டிகள் பாதிக்கப்படும் போது இந்த முறையைப் பயன்படுத்தி இலக்குகள் புதிதகா நிர்ணயிக்கப்பட்டு வருகின்றன.

2014-ல் இது டக்வொர்த்-லூயிஸ்- ஸ்ட்ரெர்ன் என்று டி.எல்.எஸ் முறையாக பிரபலமானது. இவருக்கும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் டோனி லூயிஸுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.

1992 உலகக்கோப்பையில் அரையிறுதியில் 13 பந்துகளில் 21 ரன்கள் தேவை என்ற நிலையில் மழை வர பிறகு ஆட்டம் மீண்டு தொடங்கும் போது டி.எல் முறைப்படி 1 பந்தில் 21 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட தென் ஆப்பிரிக்கா பரிதாபமாக வெளியேறிய கதையை அனைவரும் அறிவர், இது பாகிஸ்தானுக்கு சவுகரியமாகப் போனது, தென் ஆப்பிரிக்கா வந்திருந்தால் இம்ரான் கான் கோப்பையை வென்றிருக்க முடியாது. இங்கிலாந்தை பாகிஸ்தான் எளிதில் வீழ்த்தி விட்டது.

இதனையடுத்தே ஸ்டீவன் ஸ்டெர்ன் என்பார் இந்தக் கணக்கீட்டினை மாற்றி அமைத்தார். இந்நிலையில் டக் வொர்த் லூயிஸின் பிதாமகர்களில் ஒருவர் மறைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x