எனக்கு கங்குலி போல் தோனி, கோலி ஆதரவு அளிக்கவில்லை: யுவராஜ் சிங் பகீர் குற்றச்சாட்டு 

எனக்கு கங்குலி போல் தோனி, கோலி ஆதரவு அளிக்கவில்லை: யுவராஜ் சிங் பகீர் குற்றச்சாட்டு 
Updated on
1 min read

தனக்கு சவுரவ் கங்குலி கேப்டன்சியில் கிடைத்த ஆதரவு தோனியிடமிருந்தோ, கோலியிடமிருந்தோ கிடைக்கவில்லை என்று யுவராஜ் சிங் பகீர் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.

ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் சவுரவ் கங்குலி தலைமையில் நிறைய விளையாடியுள்ளேன், அவர் எனக்கு பெரிய அளவில் ஆதரவளித்தார்.

பிறகு மாஹி (தோனி) கேப்டன் பொறுப்பேற்றார், தோனி, கங்குலி கேப்டன்களை பிரித்துப் பார்ப்பது கடினம் என்றாலும் என் நினைவுகள் கங்குலி காலத்தை சுற்றியே வட்டமிடுகின்றன, காரணம் அவர் எனக்கு மிக ஆதரவாக இருந்தார்.

அது போன்ற ஆதரவு எனக்கு தோனியிடமிருந்தோ, கோலியிடமிருந்தோ கிடைக்கவில்லை.” என்றார் யுவராஜ் சிங்

யுவராஜ் சிங் ஜூன் 2019-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். தோனியின் கீழ் 2007 டி20 உலகக்கோப்பை பிறகு 2011 ஐசிசி உலகக்கோப்பைகளை இந்திய அணி வென்ற போது யுவராஜ் சிங் பெரிய அளவில் பங்களிப்புச் செய்தார்.

அதனால்தான் அவர் 2011 உ.கோப்பை தொடரின் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in