

2007 டி20 உலகக்கோப்பை இறுதியில் அந்தப் பிரபலமான திக் திக் கடைசி ஓவரை வீசிய ஜொஹிந்தர் சர்மா என்ற வேகப்பந்து வீச்சாளர் ஹரியாணா போலீஸ் டிஎஸ்பியாக கரோனா வைரஸுக்கு எதிரான பணி செய்து வருவதையடுத்து ஐசிசி அவருக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளது.
2007ம் ஆண்டு டி20 உ.கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் திரில் போட்டியையும் அந்தக் கடைசி ஓவரையும் கடைசியில் ஸ்ரீசாந்த் பிடித்த கேட்சையும் மிஸ்பா வெளியேறி தோனி கோப்பையைத் தூக்கியதும் மறக்க முடியுமா என்ன?
இந்நிலையில் கிரிக்கெட்டுக்குப் பிந்தைய தனது வாழ்க்கையில் டிஎஸ்பியாகட் தற்போது கரோனா ஒழிப்புக் கட்டுப்பாட்டு பணிகளை திறம்படச் செய்து வருவதாக ஐசிசி தன் ட்விட்டரில் பாராட்டும் போது, “கிரிக்கெட்டுக்குப் பிந்தைய வாழ்க்கையில் போலீஸ் அதிகாரியாக ஜொஹிந்தர் ஷர்மா கரோனா கட்டுப்பாட்டு பணிகளில் தன்னால் இயன்றதைச் செய்து வருகிறார்” என்று பாராட்டியுள்ளது.
இவர் 2004 முதல் 2007 வரை 4 ஒருநாள் போட்டிகள் சில டி20 போட்டிகளில் ஆடியுள்ளார், கிரிக்கெட்டை விட்ட பிறகு போலீஸ் பணியில் சேர்ந்தார்.