Last Updated : 27 Mar, 2020 04:50 PM

 

Published : 27 Mar 2020 04:50 PM
Last Updated : 27 Mar 2020 04:50 PM

கரோனா நோயாளிகளை தர்மசங்கடப்படுத்தாதீர்கள், விரும்பத் தகாதவர்களாகக் கருதாதீர்கள்: சச்சின் டெண்டுல்கர் உருக்கமான வேண்டுகோள்

கரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகளை ஒதுக்காதீர்கள், விரும்பத்தகாதவர்களாகக் கருதாதீர்கள் என்று கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உருக்குமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஸ்பெயினில் சில முதியோர் இல்லத்தில் முதியவர்கள் சிலர் கவனிப்பாரற்று இறந்து கிடந்தது பலருக்கும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல் பல இடங்களிலும் கரோனா நோயாளிகளைப் பார்த்து பீதியில் பலரும் அவர்களை ஒதுக்குவது நடந்து வருகிறது.

இதனையடுத்து சச்சின் டெண்டுல்கர் தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில், “கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவரக்ளை நாம் நேசிக்க வேண்டும் என்பது ஒரு சமூகமாக நம் அனைவரது பொறுப்பு. அவர்கள் தங்களை நினைத்தே தர்ம சங்கடப்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

நீங்களும் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள் அதே வேளையில் தங்களை அவர்கள் விரும்பத் தகாதவர்களாக கருதும் சூழலை நாம் ஏற்படுத்தி விடுதல் கூடாது. நாம் சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டுமே தவிர பாதிக்கப்பட்டவர்களை சமூக நலன்களிலிருந்து தள்ளி வைக்க வேண்டும் என்பதல்ல விஷயம்.

கரோனாவுக்கு எதிரான இந்த போரில் நாம் ஒன்றிணைந்து, சேர்ந்திருந்தால்தான் வெல்ல முடியும். தேவையான நடவடிக்கைகளையும் எடுக்க முடியும்.” என்று வேண்டிக் கேட்டுக் கொண்ட சச்சின் டெண்டுல்கர் ரூ.50 லட்சம் நன்கொடையையு அளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x