கரோனா எதிரொலி: 2021-ம் ஆண்டு  இந்தியாவில் நடைபெறும் ஐசிசி டி20 உ.கோப்பை தகுதிச் சுற்றுபோட்டிகள் நிறுத்தி வைப்பு

கரோனா எதிரொலி: 2021-ம் ஆண்டு  இந்தியாவில் நடைபெறும் ஐசிசி டி20 உ.கோப்பை தகுதிச் சுற்றுபோட்டிகள் நிறுத்தி வைப்பு
Updated on
1 min read

2021 ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெறுகின்றன, அதற்கான தகுதிச் சுற்று போட்டிகளை ஐசிசி நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. அதாவது 2021 ஐசிசி டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனால் குவைத், தென் ஆப்பிரிக்கா, ஸ்பெயின், பெல்ஜியம், மலேசியா, பின்லாந்து ஆஇய நாடுகளில் நடைபெறும் போட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

“இந்த முடிவு கரோனா வைரஸ் அச்சுறுத்தலை முன்னிட்டு உறுப்புநாடுகள் மற்றும் அரசாங்க, பொதுச் சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” என்று ஐசிசி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இந்தியா அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை நடத்துகிறது. இந்த அறிவிப்பை இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பையுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது.

ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்லன. இந்த ஆண்டு மீதமுள்ள டி20 தகுதிச் சுற்றுப் போட்டிகள் ‘தொடர்ச்சியாக கண்காணிக்கப் படுகிறது’ என்று ஐசிசி தெரிவித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in