Published : 24 Mar 2020 08:26 AM
Last Updated : 24 Mar 2020 08:26 AM

கேப்டன் என்றால் அவர் ஒருவர்தான், அது அவர்தான்: தோனியைப் புகழ்ந்த ஆல்பி மோர்கெல் 

தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஆல்பி மோர்கெல் பெரிய அளவில் வந்திருக்க வேண்டியது, ஆனால் அவரது துரதிர்ஷ்டம் என்ன நடந்ததென்றே தெரியாமல் பெரிய வீரராக உருவெடுக்க முடியாமல் போனது.

ஆனாலும் ஆடியவரையில் தேவையான போது விக்கெட்டுகளையும் தேவைப்படும் போது ரன்களையும் எடுத்த ஒரு துல்லிய ஆல்ரவுண்டர் ஆல்பி மோர்கெல் என்றால் அது மிகையாகாது. ஒருமுறை தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி பயணம் மேற்கொண்ட போது ‘ஆல்பி எங்கே?’ என்று தோனியே செய்தியாளர்களிடம் கேட்டார்.

இந்நிலையில் தன் சிஎஸ்கே அனுபவம், தோனியுடனான பழக்கம் பற்றி ஆல்பி மோர்கெல் கூறும்போது, “தோனி ஒரு பெரிய பங்காற்றும் வீரர், இந்தியாவில் தோனி என்றால் எவ்வளவு பெரிய நட்சத்திரம் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். டி20, ஒருநாள் ஆகிய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவரைப் போன்ற ஒரு தனித்துவமான வீரர் கிடையாது. ஒரு தலைவராக வீரர்களிடமிருந்து திறமையை எப்படிக் கொண்டு வருவது என்பது அவருக்கு மட்டுமே உரித்தான கலை.

சிஎஸ்கேயைப் பொறுத்தவரை முக்கிய வீரர்களை விட்டுவிடாமல் காத்து தோனி போன்ற ஒரே கேப்டன் என்ற தாரகமந்திரமே சிஎஸ்கேவின் வெற்றிக்குக் காரணம். இல்லாவிட்டால் 10 தொடர்களில் 8-ல் இறுதிக்குள் நுழைய முடியுமா? எனவே கேப்டன் என்றால் அவர் ஒருவர்தான்.

நான் சிஎஸ்கே அணியில் சில பிரமாதமான ஆண்டுகளில் ஆடினேன். என் டைம் ஓவர் என்பதை நான் ஏற்றுக் கொண்டேன், அடுத்த கட்டம் நோக்கி நகர வேண்டியுள்ளது” என்றார் ஆல்பி மோர்கெல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x