

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய(சாய்) மையத்தில் தனிமைப் படுத்தப்பட்ட சூழ்நிலையில் இந்தியஹாக்கி அணி வீரர், வீராங்கனைகள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து பெங்களூருவில் உள்ள சாய் மையம் வெளியில் இருந்து வரும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லாமல் மூடப்பட்டுள்ளது. மேலும் அங்கீகாரம் பெறாத நபர்களும் மையத்தின் வளாகத்தில் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மையத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் விதமாக இந்திய ஹாக்கி அணி வீரர், வீராங்கனைகள் வழக்கம் போன்று பயிற்சிகள் கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் கூறும்போது, “கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் எங்களது வழக்கமான பயிற்சிகள் பாதிக்கப்படவில்லை. நாங்கள் தொடர்ந்து கைகளை கழுவுகிறோம், எங்களது உடலின் வெப்பநிலை தொடர்ந்து பரிசோதிக்கப்படுகிறது.
மேலும் நாங்கள் பாதுகாப்பான சூழலில் பயிற்சியில் ஈடுபடுகிறோம் என்பதை சாய் மையத்தின் அதிகாரிகள் உறுதி செய்
துள்ளனர். சாய் மற்றும் எங்களதுபயிற்சியாளரின் உறுதுணையால் ஒலிம்பிக் போட்டிக்காக நாங்கள் கடினமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.
இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் கூறும்போது, “பெங்களூரு சாய் மையம் போன்று வசதியான ஒரு
வளாகம் கிடைப்பது எங்களுக்கு அதிர்ஷ்டம்தான். எல்லோரும் கடினமாக உழைக்கிறார்கள். இதனால் ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சிகளை இங்கு தொடர முடியும்.எங்களது உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவதற்கான எங்களது நோக்கத்தில் கவனமுடன் இருக்க சாய் மையத்தின் அதிகாரிகள் உதவியாக உள்ளனர்” என்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் அணி தனதுமுதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தையும், இந்திய மகளிர் அணி நெதர்
லாந்தையும் சந்திக்கின்றன. இந்தஇரு ஆட்டமும் ஜூலை 25-ம் தேதிநடைபெறுகிறது.- பிடிஐ