

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களை தனிமைப்படுத்தினால் என்னை குவிண்டன் டி காக்குடன் இருக்க விட்டால் நல்ல சாப்பாடு கிடைக்கும், டி காக் ஒரு அருமையான சமையல் நிபுணர் என்றார் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன்.
ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவுக்கு அவர் அளித்த கலகல பேட்டியில், “என்னைத் தனிமைப்படுத்தினால் குவிண்டன் டி காக்குடன் தனிமைப்படுத்த விரும்புவேன், அவர் எப்போதும் மீன்பிடி வீடியோக்களை ரசித்துக் கொண்டிருப்பார், அல்லது சமையல் கலை வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருப்பார். அவருடன் வீட்டிலிருந்தாலும் அவரது பொழுதுபோக்கு இதுதான்.
எனக்கு சமையல் செய்ய பிடிக்காது எனவே டி காக்குடன் இருந்தால் அவர் ஒரு சிறந்த சமையல்காரர் என்பதால் நல்ல சாப்பாடு கிடைக்கும். அவர் ஒரு முறையான சமையல்காரர்.
அதே போல் ஆண்டில் பெலுக்வயோ கேட்கும் இசைத்தொகுப்புகளை நாள் முழுதும் கேட்க வேண்டுமென்று நான் ஆசைப்பட்டால் அவருடன் இருக்க ஆசைப்படுவேன்” என்றார்.