

அண்ணா பல்கலைக்கழக திருச்சிவளாக பொறியியல் கல்லூரி, முன்னாள் மாணவர்கள் சங்கம் ஆகியவை இணைந்து அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு இடையேயான முன்னாள் மாணவர்கள் சங்க கோப்பைக்கான கால்பந்து போட்டியை கடந்த 15, 16-ம் தேதிகளில் நடத்தின.
அண்ணா பல்கலைக்கழக திருச்சி வளாக பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 6 கல்லூரிகளின் அணிகள் பங்கேற்றன.
இறுதிப்போட்டியில் அண்ணாபல்கலைக்கழக ராமநாதபுரம் பொறியியல் கல்லூரி அணி 1-0 என்ற கோல் கணக்கில் அண்ணா பல்கலைக்கழக திருச்சி வளாக பொறியியல் கல்லூரி அணியை வென்று சாம்பியன் பட்டம் பெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்றஅணிகளுக்கு அண்ணா பல்கலைக்கழக திருச்சி வளாக பொறியியல் கல்லூரி முதல்வர் டி.செந்தில்குமார் கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சியில் உடற்கல்வித் துறை இணை இயக்குநர் எம்.கோபிநாத், உதவி உடற்கல்வி இயக்குநர்கள் ஏ.முருகன், கே.ஏ.ரமேஷ், சி.சத்யநாராயணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.