

உலகமே கரோனாவை எதிர்த்து போராடி வரும் நிலையில் விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதையடுத்து ‘குடும்பத்தினருடன் நேரம் செலவிட இதுதான் சிறந்த தருணம்’ என்று 1983 உலகக்கோப்பை சாம்பியன் இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
“ஆம். வீட்டுக்குள்ளேயே முடங்கப் பணிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் சூழ்நிலையின் தீவிரத்தையும் நாம் புரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது எங்களுக்கு ஒரு புது அனுபவம்தான்.
ஆனால் இதுதான் வீரர்களுக்கு காயத்திலிருந்து மீள சரியான தருணம். வரும் போட்டிகளுக்குத் தயார்படுத்திக் கொள்ளலாம். ஓய்வு மிக அவசியம். நாம் தன்னம்பிக்கையுடன் கடவுள் நம்மிடம் கருணையாக இருக்கிறார் என்று நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். ஆண்டுக்கு 10 மாதங்கள் விளையாடிக் கொண்டுதானே இருக்கிறோம் ஆகவே ஓய்வுக்கு இது சரியான தருணம்.
நாமும் மற்றவர்களின் நலன்களுக்காக பொது இடங்களைத் தவிர்ப்பதுதானே நல்லது” என்றார்.
விவிஎஸ் லஷ்மணும் நாம் பொறுப்பு மிகுந்த குடிமக்களாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.