Published : 17 Mar 2020 08:19 AM
Last Updated : 17 Mar 2020 08:19 AM

உலகம் செயலற்று இருப்பதை பார்க்க வருத்தமாக உள்ளது- ரோஹித் சர்மா வேதனை

புதுடெல்லி:

கோவிட் 19 வைரஸ் அச்சுறுத்தலால் உலகம் செயலற்று இருப்பதை பார்க்க வருத்தமாக உள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா வேதனைபட தெரிவித்துள்ளார்.

32 வயதான ரோஹித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கோவிட் 19 வைரஸ் அச்சுறுத்தலால் கடந்த சில வாரங்கள் நமக்கு கடினமானதாக அமைந்துள்ளது. உலகம் செயலற்று இருப்பதை பார்க்க வருத்தமாக உள்ளது. இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான ஒரே வழி நாம் அனைவரும் ஒன்றிணைவது தான்.

சற்று புத்திசாலித்தனமாகவும், சற்று முன்னெச்சரிக்கையாகவும், சுற்றுப்புறங்களை அறிந்து கொள்வதன் மூலமாகவும் இதைசெய்ய முடியும். வைரஸ் தொற்றுக்கான ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டால் அருகில் உள்ள மருத்துவ அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். அவர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து கோவிட் 19 வைரஸ் தொற்று உள்ளவர்களை கவனித்து வருகிறார்கள். இந்தவைரஸ் தொற்றால் இறந்தவர்களுக்காகவும் அவர்களின் குடும்பத்துக்காகவும் எனது இதயம் வருந்துகிறது. மக்கள் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x