பிசிசிஐ கூட்டத்தில் எடுத்த முடிவு என்ன? ஷாரூக்கான் ட்வீட்

பிசிசிஐ கூட்டத்தில் எடுத்த முடிவு என்ன? ஷாரூக்கான் ட்வீட்
Updated on
1 min read

ஐபிஎல் 2020 போட்டிகளை கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தது பிசிசிஐ. இந்நிலையில் இன்று ஐபிஎல் உரிமையாளர்களை பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

அதன் முடிவில் கங்குலி கூறும்போது, “ஏப்ரல் 15ம் தேதி தொடங்கினால் அது குறைக்கப்பட்ட போட்டிகள் கொண்ட தொடராகவே இருக்கும். எத்தனைப் போட்டிகள் என்பதை என்னால் இப்போது கூற முடியாது. ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்துவது பற்றி கூட ஏப்ரல் 15ம் தேதிக்குப் பிறகே முடிவெடுக்கப்படும். இப்போதைக்கு என்று தொடங்கும் என்பது பற்றி கூறுவதற்கில்லை” என்று தெரிவித்தார்.

கூட்டத்தில் ஐபிஎல் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர், இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளரும் பாலிவுட் நடிகருமான ஷாரூக்கான் கலந்து கொண்டார்.

கூட்டத்துக்குப் பிறகு தன் ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது:

மற்ற அணி உரிமையாளர்களை களத்தை தாண்டி சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. பிசிசிஐ, ஐபில் நிர்வாகத்தினருடனான சந்திப்பு நாங்கள் அனைவரும் நினைப்பதை மீண்டும் உறுதி செய்யவே. பார்வையாளர்கள், விளையாட்டு வீரர்கள் நிர்வாகம் மற்றும் விளையாடும் நகரங்களில் பாதுகாப்புக்கே முக்கியத்துவம்.

அரசாங்கத்தின், சுகாதார அமைப்புகளின் அறிவுறுத்தல்கள் அனைத்தும் பின்பற்றப்படும். இந்த தொற்றின் வீரியம் குறைந்து ஐபிஎல் நடக்கும் என நம்புகிறேன். பிசிசிஐ மற்றும் அணி உரிமையாளர்கள் அரசாங்கத்துடன் பேசி வருகின்றனர். அனைவரின் நலனையும் மனதில் வைத்து, கூர்ந்து நோக்கி, அடுத்து என்ன என்று முடிவெடுப்போம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in