

கரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் முழுதும் ரத்து செய்யப்பட்டது, ஐபிஎல் 2020 ஏப்ரல் 15ம் தேதி வரை இப்போதைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று டெல்லி அரசு தீர்மானமே நிறைவேற்றிவிட்ட நிலையில் கர்நாடகா, மகாராஷ்டிர அரசுகளும் ஐபிஎல் குறித்து அச்சம் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் ரஞ்சி சாம்பியன் சவுராஷ்ட்ரா அணியின் கேப்டனும் இடது கை வேகப்பந்து வீச்சாளருமான ஜெய்தேவ் உனாட்கட் கூறும்போது, “இப்படிப்பட்ட சூழ்நிலை நிலவுகிறது, நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நாம் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டாலும் அது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். வீரர்களுக்கு மட்டுமல்ல, பார்வையாளர்கள் பாதுகாப்பும் முக்கியம். தொலைக்காட்சியில் போட்டிகளைப் பார்க்கலாம் அல்லது மைதானத்துக்கு வந்து பார்க்கலாம் ஆனால் எதுவாக இருந்தாலும் அதற்கு நாம் உயிரோடு இருப்பது அவசியமல்லவா! ” என்றார் ஜெய்தேவ் உனாட்கட்