

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்ஸன் தொண்டை பிரச்சினை காரணமாக வெளியேறினார், இதனையடுத்து அவருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதித்திருக்கலாம் என்று அஞ்சப்பட்டது.
அவர் உடனடியாக மருத்துவ சோதனைகள் எடுத்துக் கொண்டார், அதன் முடிவில் அவருக்கு கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
அவர் சிட்னி கிரிக்கெட் மைதானத்துக்கு திரும்புவதாக செய்திகள் வந்துள்ளன. நியூஸிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது.
கேன் ரிச்சர்ட்ஸனுக்கு கரோனா என்ற அச்சம் ஏற்பட்டதையடுத்து அவருக்குப் பதிலாக ஷான் அபாட் தேர்வு செய்யப்பட்டார்.
கேன் ரிச்சர்ட்ஸன் இந்த முறை ஐபிஎல் போட்டிகளில் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு ஆடுகிறார்.
ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது. வார்னர் (67), பிஞ்ச் (60), லபுஷேன் (56) ஆகியோர் அரைசதம் அடிக்க இஷ் சோதி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இலக்கை விரட்டி வரும் நியூஸிலாந்து அணி சற்று முன் வரை 32 ஓவர்களில் 147/5 என்று ஆடிவருகிறது, கொலின் டி கிராண்ட் ஹோம் 21 ரன்களுடனும் டாம் லேதம் 38 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.