Published : 13 Mar 2020 09:55 AM
Last Updated : 13 Mar 2020 09:55 AM

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி ஏற்றம்

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பானின் டோக்கியா நகரில் வரும் ஜூலை 24-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஜோதி பாரம்பரிய முறைப்படி கிரீஸ் நாட்டில் உள்ள ஒலிம்பியாவில் நேற்று ஏற்றப்பட்டது.

கோவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முதன்முறையாக பார்வையாளர்கள் இல்லாமல் ஒலிம்பிக்ஜோதி ஏற்றப்பட்டது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் அங்கீகாரம் பெற்ற 100 விருந்தினர்கள் மட்டுமே விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

வழக்கமாக விருந்தினர்கள் மட்டுமே 700 பேர் கலந்து கொள்வார்கள். ஆனால் இம்முறை கோவிட் 19 வைரஸ் அச்சுறுத்தலால் இந்தஎண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டிருந்தது. விழாவில் பண்டைய கிரேக்க உயர் பூசாரி உடையணிந்த நடிகை சாந்தி ஜார்ஜியோ சூரிய கதிர்களை குழி ஆடியில் குவித்து அதில் இருந்து உருவான ஜூவாலையை கொண்டு ஒலிம்பிக் ஜோதியை ஏற்றினார்.

பின்னர் அந்த ஒலிம்பிக் ஜோதியை கடந்த 2016-ம் ஆண்டுரியோ ஒலிம்பிக்கில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற கிரீஸ் நாட்டின் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான அனா கோரகாக்கி கைகளில் ஏந்தினார். இதன் மூலம் வரலாற்றில் முதன் முறையாக ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டதும் கைகளில் பெறும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றார் அனா கோரகாக்கி.

தொடர்ந்து நடைபெற்ற ஜோதி ஓட்டத்தில் ஒலிம்பிக் சுடரை அனா கோராக்கி, ஜப்பான் தடகள வீராங்கனையான நோகுச்சி மிசுகியிடம் வழங்கினார். கிரீஸ் நாட்டில் உள்ள 37 நகரங்கள், 15 தொல்பொருள் மையங்கள் என 3,500 கிலா மீட்டர் தூரம் பயணிக்கும் ஒலிம்பிக் ஜோதியானது அதன் பின்னர் போட்டியை நடத்தும் டோக்கியோ அமைப்பாளர்களிடம் மார்ச் 19-ம் தேதி ஒப்படைக்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து ஜப்பானின் புகுஷிமா நகரில் உள்ள நமியாக பகுதியில் இருந்து ஜோதி ஓட்டம் மார்ச் 26-ம் தேதி தொடங்கப்படும். அங்கிருந்து ஜப்பானின் பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்கும் ஜோதிஜூலை 24-ம் தேதி ஒலிம்பிக் போட்டி தொடங்கும் டோக்கியோவில் உள்ள மைதானத்தை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x