

கோவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியன் ஓபன் பாட்மிண்டன் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் 24-ம் தேதி டெல்லியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்தியன் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெறுமா? என்பதில் சந்தேகம் நிலவி வந்தது. இந்நிலையில் இந்தத் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என இந்திய பாட்மிண்டன் சங்கமும், சர்வதேச பாட்மிண்டன் சங்கமும் கூட்டாக அறிவித்துள்ளன.
அதேவேளையில் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் மூடிய அரங்கினுள் போட்டி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏற்கெனவே சீனா, வியட்நாம், ஜெர்மனி, போலந்து ஆகிய நாடுகளில் நடைபெற இருந்த பாட்மிண்டன் தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.