மாலத்தீவு மஸியா கிளப்புடன் சென்னை சிட்டி இன்று மோதல்

சென்னை நேரு விளையாட்டரங்கில் பயிற்சியில் ஈடுபட்ட சென்னை சிட்டி எப்சி வீரர்கள்.படம்: ஆர்.ரகு
சென்னை நேரு விளையாட்டரங்கில் பயிற்சியில் ஈடுபட்ட சென்னை சிட்டி எப்சி வீரர்கள்.படம்: ஆர்.ரகு
Updated on
1 min read

ஆசிய கால்பந்து கூட்டமைப்பு கோப்பை(ஏஎப்சி) தொடரில் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள சென்னை சிட்டி எப்சி தனதுமுதல் ஆட்டத்தில் இன்று மாலத்தீவுகளைச் சேர்ந்த மஸியா விளையாட்டு கிளப் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.

சென்னை சிட்டி அணியானது இந்த சீசனில் ஐ லீக் கால்பந்து தொடரில் சீரான ஆட்டத்திறனை வெளிப்படுத்துவதில் சுணக்கம் அடைந்தது. எனினும் நடுகள நட்சத்திர வீரரான சான்ட்ரோ இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவது அணியின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.

மஸியா அணியானது 2018-19-ம் ஆண்டு ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணியை இரு கட்டங்கள் கொண்ட பிளே ஆஃப் சுற்றில் வீழ்த்தி லீக் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. அந்த அணியில் மஹுதீ உசேன், கார்னேலியஸ் ஸ்டீவர்ட் நட்சத்திர வீரர்களாக உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in