டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் மேரி கோம்

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் மேரி கோம்
Updated on
1 min read

ஆறு முறை உலக சாம்பியனான குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் (51கிலோ) ஆசிய தகுதிச் சுற்று சாம்பியன்ஷிப் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளார்.

பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஐரிஷ் மேக்னோ என்பவரை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளார் மேரி கோம்.

37 வயதான மேரி கோம் தகுதிச் சுற்றில் சீனாவின் யுவாங் சாங் என்பவரை எதிர்கொள்கிறார். 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளை தவற விட்ட பிறகு 2வது முறையாக அவர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தற்போது தகுதி பெற்றுள்ளார்.

பூஜா ராணி (75 கிலோ), விகாஸ் கிருஷன் (69 கிலோ), அமித் பங்கல் (52 கிலோ), சதீஷ் குமார் (91கிலோ), லோவினா போர்கோஹெய்ன் (69 கிலோ) ஆகிய மற்ற இந்தியக் குத்துச் சண்டை வீரர்களும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in