பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டீனியோ திடீர் கைது 

பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டீனியோ திடீர் கைது 
Updated on
1 min read

பிரேசில் கால்பந்து நட்சத்திர ரொனால்டீனியோ பராகுவே தலைநகரில் விடுதியில் தங்கியிருந்த போது பராகுவே போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

பராகுவேயில் நுழைவதற்கான முறையான ஆவணங்கள் இல்லாமல் போலி ஆவணங்கள் மூலம் நுழைந்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளி இரவு 10 மணிக்கு அசுன்சியுன் என்ற இடத்தில் உள்ள காவல்நிலையத்தில் 39 வயது ரொனால்டீனியோ, அவரது சகோதரர் ரொபர்ட்டோ அசிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டனர்.

2002 உலகக்கோப்பை நட்சத்திரமான, ஃப்ரீ கிக் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரொனால்டீனியோ தான் வசிக்கும் ரியோ டி ஜெனீரியோவுக்குப் புறப்படுவதற்கு முன்னால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வர்த்தகக் காரணங்களுக்காக ரொனால்டீனியோவும் அவரது சகோதரர் அசிஸும் பராகுவே வந்துள்ளனர், ஆனால் போலி ஆவணங்கள் வைத்திருந்ததாக இருவரையும் 6 மணி நேரம் போலீசார் துருவித் துருவி விசாரித்தனர்.

இந்த ஆவணங்களை தனக்கு அன்பளிப்பாக அளித்தவர் பிரேசில் தொழிலதிபர் வில்மோண்டெஸ் சுசா லிரியா என்பவர் என்று போலீசாரிடம் ரொனால்டீனியோ கூறினார், ஆனால் அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது, ஏனெனில் லிரியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது,

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in