ஆச்சரியம்! ஹர்பஜனின் சிறந்த அணியில் தோனி,லாரா, முரளிதரன் இல்லை: கேப்டன் யார்? மொத்தம் எத்தனை ஆஸி.வீரர்கள்?

ஆச்சரியம்! ஹர்பஜனின் சிறந்த அணியில் தோனி,லாரா, முரளிதரன் இல்லை: கேப்டன் யார்? மொத்தம் எத்தனை ஆஸி.வீரர்கள்?
Updated on
1 min read

இந்தியாவுக்காக 107 டெஸ்ட் போட்டிகள் ஆடிய ஹர்பஜன் சிங், 417 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார், இவர் தன்னுடன் ஆடிய, தன்னை எதிர்த்து ஆடிய வீரர்கள் பட்டியலிலிருந்து தன் சிறந்த அணியைத் தேர்வு செய்துள்ளார்.

இந்த அணியில் தோனியை இவர் விக்கெட் கீப்பராகக் கூட சேர்க்கவில்லை, ஐபிஎல் ஆரம்பித்தால் சிஎஸ்கே விளம்பரத்துக்காக ‘பிராண்ட் தோனி’யைப் புகழ்ந்து தமிழில் ட்வீட்கள் போட்டு படுத்தி எடுப்பது வழக்கம் ஆனால் அவர் அணியில் தோனி இல்லை.

தொடக்க வீரர்களாக சேவாக், ஹெய்டனை தேர்ந்தெடுத்துள்ளார் ஹர்பஜன், இவர் அணியில் லாரா இல்லை. இந்தியாவில் ஸ்பின் பவுலிங்கைச் சிறப்பாக ஆடிய இங்கிலாந்தின் அலிஸ்டர் குக் இல்லை. வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெவின் பீட்டர்சன் இல்லை.

அனைத்திற்கும் மேலாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய ஸ்பின்னரான, ஹர்பஜனின் கூட்டாளியான அனில் கும்ப்ளே இல்லை. இவருடைய குருநாதராகக் கருதப்படும் உலகிலேயே 800 விக்கெட்டுகள் சிகரம் தொட்ட முரளிதரனும் இல்லை.

ஹர்பஜன் சிங்கின் சிறந்த அணி வருமாறு:

சேவாக், ஹெய்டன், திராவிட், சச்சின் டெண்டுல்கர், ஜாக் காலீஸ், ரிக்கி பாண்டிங் (கேட்பன்), குமார் சங்கக்காரா (விக்கெட் கீப்பர்), ஷான் போலக், ஷேன் வார்ன், வாசிம் அக்ரம், கிளென் மெக்ரா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in