

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சுனில் ஜோஷிதேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேர்வுக்குழு உறுப்பினர்களான தென் மண்டல பிரதிநிதி எம்எஸ்கே பிரசாத், மத்திய மண்டல பிரதிநிதி ககன் கோடா ஆகியோரது பதவிக் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இரு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டது. இதற்காக மதன் லால், ஆர்.பி.சிங், சுலக் ஷனா நாயக் ஆகியோரை கொண்ட பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியானது சுனில் ஜோஷி, ஹர்விந்தர் சிங், வெங்கடேஷ் பிரசாத், ராஜேஷ் சவுகான், எல்.சிவராமகிருஷ்ணன் ஆகிய 5 பேரை அழைத்து நேர் காணல் நடத்தியது.
இதில் சுனில் ஜோஷியை (தென்மண்ட பிரதிநிதி) தேர்வுக்குழு தலைவராக தேர்வு செய்துள்ளது கிரிக்கெட் ஆலோசனை குழு. 48 வயதான முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான சுனில் ஜோஷி இந்திய அணிக்காக 15 டெஸ்ட், 69 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
ககன் கோடா இடத்துக்கு முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஹர்விந்தர் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 42 வயதான ஹர்விந்தர் சிங் இந்திய அணிக்காக3 டெஸ்ட், 16 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.