ஐபிஎல் பரிசுத்தொகையில் எதிர்பாரா  ‘கட்’ -  ‘கலந்தாலோசிக்கவில்லை’ - அணி உரிமையாளர்கள் கடும் அதிருப்தி

ஐபிஎல் பரிசுத்தொகையில் எதிர்பாரா  ‘கட்’ -  ‘கலந்தாலோசிக்கவில்லை’ - அணி உரிமையாளர்கள் கடும் அதிருப்தி
Updated on
1 min read

ஐபிஎல் டி20 போட்டிகளுக்கான பரிசுத் தொகையைப் பாதியாகக் குறைத்து ரூ.25 கோடியாக்கும் முடிவின் மீது 8 அணி உரிமையாளர்களும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

டாப் 4 அணிகளுக்கான பரிசுத் தொகை ரூ.50 கோடி பிரித்தளிக்கப்படும், இது தற்போது ரூ.25 கோடியாக்கப்பட்டுள்ளது. இதோடு மட்டுமல்லாமல் போட்டிகள் நடக்கும் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு ரூ.50 லட்சம் தரவும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இது ரூ.20 லட்சம் அதிகரிக்கப்பட்டுள்ளது

“பரிசுத் தொகை குறைப்பு எங்களுக்கு திருப்தியளிக்கவில்லை, எங்களை கலந்தாலோசிக்கவில்லை. நாங்கள் கூடி இதனை விவாதிக்கவிருக்கிறோம்” என்று தென்பகுதியைச் சேர்ந்த அணியின் நிர்வாகி ஒருவர் பிடிஐ-யிடம் தெரிவித்தார்.

முன்பு கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.25 கோடி கிடைக்கும், இப்போது ரூ.10 கோடிதான் கிடைக்கும். ரன்னர் அணிக்கு ரூ.6.25 கோடி கிடைக்கும் முன்பு இது ரூ.12.5 கோடியாக இருந்தது. 3 மற்றும் 4ம் இடங்களில் முடியும் அணிக்கு ரூ.4.3 கோடி கிடைக்கும் இது முன்பு ரூ.6.25 கோடியாக உள்ளது.

இன்னொரு அணியின் நிர்வாகி கூறும்போது, “ஐபிஎல் ஒரு பிக் ஹிட். எனவே நாங்கள் இந்த தொகைக் குறைப்பை விவாதிக்கிறோம். விரைவில் அனைத்து அணிஉரிமையாளர்களும் சந்திக்கிறோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in