Published : 02 Mar 2020 03:25 PM
Last Updated : 02 Mar 2020 03:25 PM

டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அதிக ஸ்கோர் எடுத்தது யார் தெரியுமா?- நியூஸி. டெஸ்ட் தொடர் சில சுவாரஸ்ய தகவல்கள்

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்று ஒயிட்வாஷ் தோல்வியாக இழந்துள்ளது. இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு பல விதங்களில் மோசமான டெஸ்ட் தொடராக அமைந்துள்ளது.

புள்ளி விவரங்கள் வருமாறு:

ஒரு விக்கெட்டுக்கான இந்திய அணியின் பேட்டிங் சராசரி 18.05 இது மூன்றாவது மோசமான சராசரியாகும். இதற்கு முன்னாலும் இருமுறை மோசமான, ஒரு விக்கெட்டுக்கான, சராசரியும் நியூஸிலாந்துக்கு எதிராகத்தான் 2002-03-ல் 13.37 , முன்னதாக 1969-70-ல் 16.61 (இது நியூஸி. இந்தியாவுக்கு வந்த போது).

இந்தத் தொடரில் இந்திய அணியின் அதிகபட்ச ஒரு இன்னிங்ஸ் ஸ்கோர் 242 ஆல் அவுட் ஆகும். இது 2வது மோசமான அதிகபட்ச அணி ஸ்கோராகும், 2002-03-ல் 161 ஆல் அவுட் தான் அந்தத் தொடரில் இந்திய அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும்.

நியூஸிலாந்து அணியின் டெய்ல் எண்டர்கள் இந்தத் தொடரில் எடுத்த ரன்களின் சராசரி 34.61 மாறாக இந்திய அணியின் டெய்ல் எண்டர்கள் எடுத்த ரன்கள் சராசரி 10.33 ஆகும்.

இந்தத் தொடரில் அதிக தனிப்பட்ட ஸ்கோரை எடுத்தது யார் தெரியுமா? மயங்க் அகர்வால், அவர் எடுத்த 58 ரன்களே அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோராகும். 2002-03- தொடரிலும் ஒரு இந்திய வீரர் கூட டெஸ்ட்டில் சதம் எடுக்கவில்லை.

இதற்கு முன்பாக இருமுறை இந்திய அணி ஒயிட்வாஷ் வாங்கியுள்ளது, அது தோனி கேப்டன்சியில் இங்கிலாந்து மற்றும் ஆஸி. தொடர்களில், 2002-03-லும் ஒயிட்வாஷ் வாங்கியது, ஆனால் கோலி தலைமையில் இப்போதுதான் முதல் ஒயிட்வாஷ் தோல்வி ஏற்பட்டுள்ளது.

விராட் கோலி இந்தத் தொடரில் டி20 தொடரில் எடுத்த ஸ்கோர் 45, 11, 38, 11. ஒருநாள் தொடரில், 51,5 15, 9, டெஸ்ட் தொடரில் 2, ,219, 3, 14. டெஸ்ட் தொடரில் கோலியின் சராசரி 9.50. ஆனால் கும்ப்ளே பயிற்சியாளராக இருந்த போது ஸ்மித் தலைமையில் ஆஸ்திரேலியா இங்கு வந்த போது அந்த டெஸ்ட் தொடரில் கோலியின் சராசரி இதைவிட மோசமான 9.20 ஆக இருந்தது. அந்தத் தொடரில் 5 இன்னிங்ஸ்களில் 46 ரன்களையே அவர் எடுத்தார்.

டிம் சவுத்தி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதைத் தட்டிச் சென்றார், அவர் வாழ்க்கையில் தொடர் நாயகன் விருது பெறுவது இது 2வது முறையாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x