Published : 29 Feb 2020 06:41 AM
Last Updated : 29 Feb 2020 06:41 AM

ஐஎஸ்எல் அரை இறுதி ஆட்டம்: சென்னை - கோவா இன்று மோதல்

ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் சென்னையின் எப்சி, எப்சி கோவா அணிகள் இன்று மோதவுள்ளன.

2019-20 சீசன் ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.அரை இறுதிக்கு எப்சி கோவா, சென்னையின் எப்சி, ஏடிகே (அட்லெடிகோ டி கொல்கத்தா), பெங்களூரு எப்சி அணிகள் முன்னேறியுள்ளன.

லீக் ஆட்டங்களின் முடிவில் முதலிடத்தை எப்சி கோவா அணியும், 2-வது இடத்தை ஏடிகே அணியும், 3-வது இடத்தை பெங்களூரு அணியும், 4-வது இடத்தை சென்னையின் எப்சி அணியும் பிடித்தன.

இதையடுத்து இன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் சென்னையின் எப்சி அணியுடன், எப்சி கோவா அணி மோதவுள்ளது. லீக்ஆட்டங்களி்ல எப்சி கோவா அணி18 ஆட்டங்களில் விளையாடி 12வெற்றி, 3 டிரா, 3 தோல்விகளுடன் முதலிடத்தைப் பிடித்து வலுவான நிலையில் உள்ளது.

அதே நேரத்தில் சென்னையின் எப்சி அணி 18 ஆட்டங்களில் பங்கேற்று 8 வெற்றி, 5 டிரா,5 தோல்விகளுடன் 4-வது இடத்தைப் பிடித்தது. சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்த ஜான் கிரகோரி மாற்றப்பட்டு ஓவன் கோய்லே புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து சென்னை அணி கடந்த 12 போட்டிகளில் 24 புள்ளிகளை (7 வெற்றி, 3 டிரா) பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

சென்னை அணி வீரர் நெரிஜஸ் வால்ஸ்கிஸ் 13 கோல்களை அடித்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார்.

அதேபோல் ஆந்த்ரே ஷெம்பிரி, அனிருத் தாப்பா, எலி சாபியா, ரபேல் கிரைவெலரோ ஆகியோரும் அணிக்கு வெற்றி தேடித் தருவதில் முனைப்புடன் உள்ளனர்.

அதே நேரத்தில் கடந்த 5 ஆட்டங்களில் பெற்ற தொடர் வெற்றியின் உற்சாகத்தில் களம்இறங்குகிறது எப்சி கோவா அணி.அந்த அணி வீரர் பெர்ரான் கோரோமினாஸ் இதுவரை 14 கோல்களை அடித்து அசத்தியுள்ளார்.

அதைப் போல் பார்த்தோலோமியு ஒக்பெச்சே, ஹுகே போமஸ் ஆகியோரும் எதிரணியின் கள வியூகத்தை உடைக்கக் காத்திருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x