

வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் பிரமாதமாக ஆடிய நியூஸிலாந்து அணியைப் பாராட்டிய கபில்தேவ், கிறைஸ்ட்சர்ச் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிச்சயம் மீண்டெழுந்து நியூஸிலாந்துக்கு சவால் அளிக்கும் என்றார்.
இந்திய அணியில் தோனியின்திர்காலம் எனும் புதிர் பற்றி பலரும் பலவிதங்களில் ‘க்ளிஷே’ ரக பதில்களை அளித்து வரும் நிலையில் கபில்தேவ் இது பற்றி தத்துவார்த்தமாக, சூசகமாகப் பதில் அளித்துள்ளார்.
“எதிர்காலம் என்பது தோனிக்கு மட்டுமல்ல, திறமை வாய்ந்த பல இளம் வீரர்களுக்கானது. நான் தோனியின் ரசிகன் தான். அவர் தன் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார், அவர் இந்திய கிரிக்கெட்டுக்காக ஏராளமாக பங்களிப்புச் செய்துள்ளார். ஒரு ரசிகனாக நான் அவர் ஆட வேண்டும் என்று விரும்புகிறேன்.
ஆனால் ஒரு தொழில்பூர்வ ஆட்டக்காரராக அவர் கிரிக்கெட் ஆடி நீண்ட காலம் ஆகிவிட்டது. ஐபிஎல் மூலம் அவர் மீண்டும் அணிக்குள் வரலாம் என்று கூறலாம், ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் திறமையை நிரூபித்து இந்திய அணிக்குள் நுழைய விரும்பும் ஏராளமான இளம் வீரர்களுக்குரியதே ஐபிஎல் போட்டி. எதிர்கால இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கானது ஐபிஎல்” என்று கபில்தேவ் ஐபில் கிரிக்கெட்டில் தோனி ஆடுவதை பொறுத்து உலகக்கோப்பை டி20யில் அவர் ஆடுவது தீர்மானிக்கப்படும் என்று ரவிசாஸ்திரி உள்ளிட்டோர் கூறிவந்தமைக்கு கபில்தேவ் ரத்தினச் சுருக்கமாக ஐபிஎல் கிரிக்கெட் லட்சியம் கொண்ட இளம் எதிர்கால இந்திய வீரர்களுக்கானது என்று கூறியுள்ளார்.