Published : 27 Feb 2020 03:09 PM
Last Updated : 27 Feb 2020 03:09 PM

என்னைப் போன்ற சராசரி பேட்ஸ்மென்களுக்கு 40 ரன் என்பது  ‘டீசன்ட்’ ஸ்கோர், சச்சினுக்கோ இது தோல்வியடைந்த இன்னிங்ஸ்: ஆகாஷ் சோப்ரா கருத்து

விரேந்திர சேவாகுடன் தொடக்க வீரராகக் களமிறங்கிய ஆகாஷ் சோப்ரா சில நல்ல தடுப்பாட்ட இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார், இவர் ஒருமுனையில் தடுப்பு உத்தியைக் கையாள இன்னொரு முனையில் சேவாக் எந்த பவுலர் என்று பார்க்காமல் அடித்து நொறுக்கியது பலருக்கும் நினைவிருக்கலாம்.

இந்நிலையில் ஜஸ்பிரித் பும்ராவின் ஃபார்ம் பின்னடைவு குறித்து ஈஎஸ்பின் கிரிக் இன்போவில் பத்தி எழுதியுள்ள ஆகாஷ் சோப்ரா, பும்ராவின் பின்னடைவுக்கான காரணங்களை அலசும் போது மிகவும் நேர்மையாக, “சாம்பியன்கள் தங்களது வெற்றிக்கான விலையைக் கொடுக்க வேண்டி வருகிறது என்பதை ஏற்றுக் கொள்வோம். ஏனெனில் அவர்கள் தங்களுக்கென ஒரு உயர்ந்த தரத்தை நிர்ணயித்துக் கொள்கின்றனர்.

எனவே அதிலிருந்து சற்றே வழுவினாலும் அவர்களுக்கு அது பெரிய தோல்வி, பின்னடைவாகவே தோன்றும். என்னைப்போன்ற சராசரி வீரர்களுக்கு 40 ரன்கள் எடுத்து விட்டால் அது நல்ல ஸ்கோர், டீசண்ட் ஸ்கோர் என்று மகிழ்ச்சி அடைந்து கொள்வோம், ஆனால் சச்சின் டெண்டுல்கர் 40 ரன்களில் ஆட்டமிழந்தார் என்றால் அது ஒரு பின்னடைவு, தோல்வி அடைந்த இன்னிங்ஸ் என்பதாகவே தங்கள் இன்னிங்சை அறுதியிடுவர்.

அதே போல்தான் பும்ராவும் தனக்கென ஒரு உயரிய தரத்தை நிர்ணயித்துக் கொண்டவர், பும்ரா வீசும் ஒவ்வொரு பந்துமே ஒரு நிகழ்வு என்று விராட் கோலி புகழாரம் சூட்டினார், குறுகிய காலத்தில் பெரிய உச்சத்தைத் தொட்டவர் பும்ரா. எந்த ஒரு சூழ்நிலையும் அவருக்குத் தடையாக இல்லை எந்த ஒரு பேட்ஸ்மெனும் அவரை தன்னம்பிக்கையாக ஆடினார்கள் என்று கூற முடியாது.

காயத்திற்குப் பிறகு அவரது லெந்த்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது, இதுதான் பின்னடைவுக்குக் காரணம் அவர் உச்சத்தில் இருந்த போது பின்னால் சென்று கட் ஆடவும் முடியாத முன்னால் வந்து ட்ரைவ் ஆடவும் முடியாத ஒரு லெந்தில் வீசி பேட்ஸ்மென்களை அச்சுறுத்தியதோடு குட் லெந்த்தில் வீசி விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் ஃபுல் லெந்திலும் ஸ்விங்கில் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். அவரது இந்தத் தன்மைதான் பேட்ஸ்மென்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது.

ஆனால் காயத்துக்கு பிறகு அவர் சற்றே ஷார்ட் ஆக வீசி வருகிறார், இதனால் ஸ்விங்கை இழந்து விட்டார். இதோடு முன்பெல்லாம் இவரது பந்துகளில் ரன் எடுப்பது கடினம் ஆனால் இப்போதெல்லாம் அவர் பவுண்டரி அடிக்கக் கூடிய பந்துகளை அதிகம் வீசுகிறார்.

ஜாகீர் கான் கூறியதுதான் நினைவுக்கு வருகிறது, நாம் பார்மில் இருக்கும் போது வீசும் அதே ‘மேஜிக் பந்துகளை’ பார்மில் இல்லாத போதும் முயற்சித்து பவுண்டரி பந்துகளை வழங்குவதில்தான் போய் முடியும். எனவே ஈகோவைக் கைவிட வேண்டும் என்பார் ஜாகீர் கான். பும்ரா இதிலிருந்து நிச்சயம் மீண்டு எழுவார்.

இவ்வாறு ஆகாஷ் சோப்ரா தன் பத்தியில் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x