Published : 26 Feb 2020 01:01 PM
Last Updated : 26 Feb 2020 01:01 PM

2 மற்றும் 19...  ஏழு ஒருநாள் இன்னிங்ஸ்களில் ஒரே அரைசதம்.. கோலியை இப்படியே வைத்திருங்கள்: நீல் வாக்னர் திட்டம் 

கான்பூர் டெஸ்ட் போட்டியில் நீல் வாக்னரிடம் ஆட்டமிழந்து செல்லும் விராட் கோலி. 2016 ம் ஆண்டு படம். பிடிஐ

விராட் கோலியின் பார்ம் தற்போது தளர்ந்துள்ளது, எல்லா கிரேட் பிளேயர்களுக்கும் இத்தகைய காலக்கட்டம் வருவது இயல்பானதுதான் இதிலிருந்து பொதுவாக கிரேட் பிளேயர்கள் மீண்டு விடுவார்கள், இல்லையேல் அவர்களது கரியர் முடிந்து விடும்.

வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 2 இரண்டாவது இன்னிங்சில் 19. கடந்த 7 ஒருநாள் போட்டிகளில் ஒரேயொரு அரைசதம் என்று ரன் மெஷின் போல்ட் நெட்டுகளுடன் இருந்தாலும் சரிவர வேலை செய்யவில்லை. இந்நிலையில் கிறைஸ்ட் சர்ச் டெஸ்ட் போட்டியில் அவர் ரன்களைக் குவித்தால்தன இந்திய அணி ஏதாவது கடைதேறும் என்ற நிலை உள்ளது.

இந்நிலையில் கிறைஸ்ட் சர்ச் டெஸ்ட் போட்டிக்காக மீண்டும் வந்துள்ள இடது கை வேகப்பந்து வீச்சாளரும் ஷார்ட் பிட்ச், பவுன்சர் ஸ்பெஷலிஸ்டுமான நீல் வாக்னர் கோலி பற்றி கூறும்போது, “எந்த அணிக்கு எதிராக நான் ஆடினாலும் அதன் முக்கியமான வீரர்களைக் குறிவைப்பேன். ஒரு அணியின் சிறந்த வீரர்களை வீழ்த்தி விட்டால் அந்த அணியே பலவீனமடைந்து விடும்.

விராட் கோலியை ரன் எடுக்க விடாமல் வறட்சியாக்கி விடுங்கள், இருமுனைகளிலிருந்தும் அவருக்கு கடும் நெருக்கடி கொடுக்க வேண்டும்” என்றார்.

6 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் இதுவரை விராட் கோலியை 3 முறை வீழ்த்தியுள்ளார் வாக்னர். கோலிக்கு இவர் 108 பந்துகளை வீசி 60 ரன்களை மட்டுமே கொடுத்துள்ளதாக கிரிக் இன்போ புள்ளிவிவரம் தெரிவிக்கின்றன.

2013-14 தொடரில் இந்திய அணி நியூஸிலாந்துக்குச் சென்று தொடரை ஆடிய போது ஆக்லாந்து டெஸ்ட் போட்டியில் 407 ரன்கள் வெற்றி இலக்கை இந்திய அணி துரத்தி மிரட்டியது கோலி, ஷிகர் தவண் இணைந்து 122 ரன்கள் பார்ட்னர் ஷிப் அமைக்க இந்திய அணி 222/2 என்று இருந்தது, ஆனால் அப்போது வந்த வாக்னர் ரவுண்ட் த விக்கெட்டில் பவுன்சரில் ஷிகர் தவணைக் காலி செய்தார். முன்னதாக கோலியையும் காலி செய்தார். கோலி 67 ரன்களில் வாக்னர் வீசிய வைட் ஆஃப் ஸ்டம்ப் ஷார்ட் பிட்ச் பந்தை கட் ஆடாமல் புல் ஆடி மட்டையின் அடிவிளிம்பில் பட்டு கேட்ச் ஆனது. கேப்டன் தோனி 41 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த நிலையில் வாக்னரின் ஸ்லோ பவுன்சரை ஆட முனைந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார் இந்திய அணி 366 ரன்கள் வரை வந்து தோற்றது, வாக்னர் 62/4 என்று டெஸ்ட்டில் மொத்தம் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், இது குறித்து அவர் கூறும்போது,

“அப்போதுதான் அணியில் காலூன்ற முயற்சி செய்து கொண்டிருந்த நேரம். அப்போதுதான் இந்த டெஸ்ட் போட்டி எனக்கு நன்றாக அமைந்தது. இந்த டெஸ்ட் போட்டிதான் என் கரியரின் தொடக்கம்” என்றார் வாக்னர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x