

முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ஜான் ரைட் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் தனக்கு ஆச்சரியமளித்தது என்று கூறியதோடு இந்திய அணி தன் பேட்டிங் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தி இந்து ஸ்போர்ட்ஸ்டாருக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்திய அணியினர் தளர்ந்து போயுள்ளனர். புதிய 2 தொடக்க வீரர்கள், மிடில் ஆர்டர் கஷ்டப்படுகிறார்கள். எனவெ இந்திய அணியினர் தீர்வுகளை உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டும்.
இந்திய அணிக்கு நல்ல செய்தி என்னவெனில் கிறைஸ்ட் சர்ச்சில் சமீபமாக இந்தியா ஏ அணியினர் விளையாடியுள்ளனர், அதனால் கோலி அணிக்கு பின்னூட்டங்கள் அதைப்பற்ற் கிடைக்க வாய்ப்புள்ளது.
கேன் வில்லியம்சன் தன் பெயருக்கு முன்னால் கிரேட் என்று சேர்க்கப்படுவதற்கான அனைத்துத் தரங்களையும் கொண்டுள்ளனர். அவர் ஆடும்போது அவர் பெயரில் ரன் எண்ணிக்கை 40 என்று காட்டும் ஆனால் அவர் அந்த ரன்களை எடுத்ததே தெரியாது. அவர் 40 அடித்து விட்டாரா என்ற ஆச்சரியமே எதிரணியினருக்கு மிஞ்சும். அதுதான் மிகச்சிறந்த வீரருக்கான குணாம்சம்.
மேலும் வில்லியம்சன் மிகவும் எளிமையானவர், இன்னும் தன் கரியரில் பாதியைக்கூட அவர் கடந்து விடவில்லை.
ராஸ் டெய்லர் ஒரு இயற்கையான பேட்ஸ்மென், அவரிடம் நிறைய ஷாட்கள் உள்ளன. நியூஸிலாந்து அணிக்காக அவரது பங்களிப்பு அளப்பரியது, என்றார் ஜான் ரைட்.