இது போன்ற பிட்ச்களில் ரன்னர் முனையில் இருப்பதே நல்லது: ஜேமிசனைப் பாராட்டிய மயங்க் அகர்வால் பேட்டி

இது போன்ற பிட்ச்களில் ரன்னர் முனையில் இருப்பதே நல்லது: ஜேமிசனைப் பாராட்டிய மயங்க் அகர்வால் பேட்டி
Updated on
1 min read

வெலிங்டன் டெஸ்ட் முதல் நாள் ஆட்டத்தில் நல்ல டெஸ்ட் இன்னிங்சை ஆடி பெரிய ஸ்கோராக மாற்றாமல் 34 ரன்களில் போல்ட்டின் ஒன்றுமில்லாத பந்தை நேராகக் குறிபார்த்து பீல்டர் கையில் கொடுத்து ஆட்டமிழந்தார் மயங்க் அகர்வால்.

இந்நிலையில் அவர் முதல் நாள் ஆட்டம், பிட்ச், கைல் ஜேமிசன் பவுலிங் குறித்து கூறியதாவது:

ஜேமிசன் பிரமாதமாக வீசினார். நல்ல பவுன்ஸ் செய்ததோடு நல்ல இடங்களில் பந்தை பிட்ச் செய்தார். புதிய பந்தை அவர் பயன்படுத்திய விதம் அபரிமிதமானது, தொடர்ந்து எங்களை சவாலுக்குட்படுத்தினார்.

பிட்ச் மென்மையாக இருந்தாலும் அவர் கூடுதல் பவுன்ஸை தன் உயரத்தின் மூலம் பெற்றார். பேட்ஸ்மெனாக நாம் கொஞ்சம் பவுன்ஸுக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அது கொஞ்சம் கடினம்தான்.

மேலும் காற்றின் வேகம் கொஞ்சம் அதிகம்தான். களத்தில் நாம் நம்மை சரிப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. இது எளிதானதல்ல, குறிப்பாக இந்தப் பிட்சில் முதல்நாள் ஆட்டத்தில் எளிதல்ல.

நாம் செட்டில் ஆகிவிட்டதான உணர்வே வரவில்லை, காரணம் உணவு இடைவேளைக்குப் பிறகும் ஸ்விங் ஆனது. நான் அவுட் ஆன விதம் குறித்து கவலைப்படவில்லை. பந்துக்கு சரியாக வினையாற்றினோமா என்பதே முக்கியம். எனவே கையில் அடித்து கேட்ச் கொடுத்தது பற்றி சிந்திக்கவில்லை, இந்த பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலைகளில் பேட்ஸ்மென் ரன்னர் முனையில் இருப்பதுதான் சிறந்தது.

எவ்வளவு நேரம் நாளை ஆடுகிறோமோ ரன்களை அதிகம் எடுக்க வேண்டும் அதுதான் நல்லது. ரஜானே பேட்டிங் நன்றாக இருக்கிறது. அவரும் ரிஷப் பந்த்தும் ஒரு பெரிய கூட்டணி அமைத்து அணிக்கு பெரிய ஸ்கோரை பெற்றுத்தருவார்கள் என்று நம்புகிறேன், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in