Published : 21 Feb 2020 09:06 AM
Last Updated : 21 Feb 2020 09:06 AM

புரோ ஹாக்கி லீக்: இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்

புரோ ஹாக்கி லீக்கில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை இன்று எதிர்கொள்கிறது இந்திய அணி. புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இரவு 7 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

முதன்முறையாக புரோ ஹாக்கிலீக்கில் விளையாடி வரும் இந்திய ஆடவர் அணி சிறப்பான திறனை வெளிப்படுத்தி வருகிறது. 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள இந்திய அணி 8 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது. மன்பீரீத் சிங் தலைமையிலான இந்திய அணி தனது முதல் மோதலில் நெதர்லாந்தை இரு முறை வீழ்த்தியது.

தொடர்ந்து பெல்ஜியம் அணிக்குஎதிரான மோதலில் முதல் ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற நிலையில் 2-வது ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டிருந்தது. அதேவேளையில் ஆஸ்திரேலிய அணி 4 ஆட்டங்களில் விளையாடி 6 புள்ளிகளுடன் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. உலகத் தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் ஆஸ்திரேலிய அணியானது தனது முதல் மோதலில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டது. எனினும் அடுத்தமோதலில் இங்கிலாந்து அணியை இரு முறை வீழ்த்தி அசத்தியது.

தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் இந்தியாவுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 30 ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி 22-ல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால் அந்த அணி மீண்டும் ஒரு முறை ஆதிக்கம் செலுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும். எனினும் இந்திய அணியின் சமீபகால பார்ம் சிறப்பாக இருப்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக அமையக்கூடும்.

நேரம்: இரவு 7

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x