ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு 3 தங்கம்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு 3 தங்கம்
Updated on
1 min read

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் மகளிர் பிரிவில் இந்தியாவின் திவ்யா கரன், சரிதா மோர், பிங்கி ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.

டெல்லியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிருக்கான 68 கிலோ எடைப் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் திவ்யா கரன் 6-4 என்ற கணக்கில் ஜப்பானின் நருஹா மாட்சுயுகியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். 59 கிலோ எடைப் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் சரிதா மோர் 3-2 மங்கோலியாவின் அட்லாண்ட்செட்செக்கை வீழ்த்தி தங்கம் வென்றார்.

அதே வேளையில் 55 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பிங்கி 2-1 என்ற கணக்கில் மங்கோலியாவின் துல்குன் போலோர்மாவை தோற்கடித்து தங்கம் வென்றார். 50 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் நிர்மலா தேவி வெள்ளிப் பதக்கம் பெற்றார். இறுதி சுற்றில்நிர்மலா தேவி 3-2 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் யக்சிமுரடோவாவிடம் தோல்வி கண்டார்.

மகளிர் பிரிவில் மட்டும் நேற்று நடைபெற்ற 5 பிரிவுகளில் இந்திய அணி 4 பதக்கங்களை வேட்டையாடியது.

76 கிலோ எடைப் பிரிவில் கிரண் மட்டுமே பதக்கம் கைப்பற்றத் தவறினார். ஆசிய சாம்பியன்ஷிப்பின் மகளிர் பிரிவில் இந்திய அணி அதிக தங்கப் பதக்கத்தை கைப்பற்றுவது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் கடந்த 2018-ம் ஆண்டு கிர்கிஸ்தானில் நடைபெற்ற போட்டியில் அதிகபட்சமாக மகளிர்பிரிவில் ஒரு தங்கம் மட்டுமே இந்தியா வென்றிருந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in