Published : 20 Feb 2020 08:21 AM
Last Updated : 20 Feb 2020 08:21 AM

2-வது சுற்றில் சாய்னா நெவால்

ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நெவால் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

பார்சிலோனா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில்இந்தியாவின் சாய்னா நெவால், ஜெர்மனியின் யுவோன் லி-யை எதிர்த்து விளையாடினார். 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாய்னா 21-16, 21-14 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார்.

கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரணவ் ஜெர்ரி சோப்ரா, ஷிக்கி ரெட்டி ஜோடி 10-21, 21-16, 21-17 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் மத்தியாஸ் கிறிஸ்டியன்சென், அலெக்சாண்ட்ரா போஜ் ஜோடியை வீழ்த்தியது.

ஆடவர் ஒற்றையர்பிரிவில் இந்தியாவின்ஹெச்எஸ் பிரனோய் 18-21, 15-21 என்ற நேர் செட்கணக்கில் மலேசியாவின்டேரன் லியுவிடம்தோல்வி அடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x