27 ஆண்டுகளில் முதல்முறை: ஆசிய மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் சுனில் குமார் தங்கம் வென்றார்

தங்கம் வென்ற இந்திய வீரர் சுனில் குமார்
தங்கம் வென்ற இந்திய வீரர் சுனில் குமார்
Updated on
1 min read

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சுனில் குமார் 87 ஆடவருக்கான 87 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

கடந்த 27 ஆண்டுகளில் மல்யுத்தத்தில் கிரீக்கோ ரோமன் பிரிவில் இதுவரை யாரும் தங்கம் வென்றதில்லை. முதல்முறையாக அந்த பிரிவில் சுனில் குமார் தங்கம் வென்றுள்ளார்.

டெல்லியில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இன்று நடந்த ஆடவருக்கான 87 கிலோ கிரீக்கோ-ரோமன் எடைப்பிரிவுக்கான போட்டி நடந்தது.

இதில் கிரிகிஸ்தான் வீரர் ஆசாத் சாலிடினோவை எதிர்கொண்டார் இந்திய வீரர் சுனில் குமார். பரபரப்பாக நடந்த ஆட்டத்தில் கிரிகிஸ்தான் வீரர் ஆசாத்தை 5-0 என்ற பள்ளிக்கணக்கில் வீழ்த்தித் தங்கப்பதக்கத்தை வென்றார் இந்திய வீரர் சுனில் குமார்

அரையிறுதியில் கஜகஸ்தான் வீரர் அசாமத் குஸ்துபேயவ் 12-8 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சுனில் குமார் தகுதி பெற்றார். ஒரு கட்டத்தில் 1-8 என்ற கணக்கில் சுனில்குமார் பின்தங்கி இருந்தார். ஆனால், அதன்பின் தொடர்ந்து முன்னேறி 12-8 என்ற கணக்கில் சுனில் குமார் வெற்றி பெற்றார்

கடந்த 2019-ம் ஆண்டில் சுனில் குமார் இறுதிப்போட்டிவரை வந்த தோல்வியடைந்ததால், வெள்ளியோடு விடை பெற்றார்.

55 கிலோ எடைப்பிரிவில் கிரிக்கோ-ரோமன் பிரிவில் இந்திய வீரர் அர்ஜுன் ஹலாகுர்கி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in