Published : 17 Feb 2020 08:56 PM
Last Updated : 17 Feb 2020 08:56 PM

லபுஷேன் குறித்த சச்சின் டெண்டுல்கர் பாராட்டை  அலட்சியப்படுத்திய ஸ்டீவ் வாஹ்

லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கரிடம் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் இவரது பேட்டிங்கை நினைவூட்டக்கூடிய நடப்பு கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்வி முன் வைக்கப்பட்ட போது ஆஸ்திரேலியாவின் வளரும் நட்சத்திரம் லபுஷேனை புகழ்ந்து பேசினார் சச்சின் டெண்டுல்கர்.

ஸ்டீவ் வாஹ் அது குறித்து கூறிய போது சச்சின் கருத்தை ஒரு பொருட்டாகவே கருதாமல் புறந்தள்ளியுள்ளார்.

லபுஷேன் எப்படி தலையில் அடிவாங்கிய பின்பு ஒரு 15 நிமிடம் எப்படி ஆடினார் என்பதை சச்சின் டெண்டுல்கர் விதந்தோதினா, அந்த ஆதிக்க மனோபாவத்தை தன்னுடன் ஒப்பிட்டுக் கூறினார் சச்சின்.

இந்நிலையில் ஸ்டீவ் வாஹ், சச்சின் டெண்டுல்கரின் இந்தக் கருத்தைப் புறக்கணித்துக் கூறும்போது, “லபுஷேனின் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் தணிப்பதற்காக கூறியிருப்பாரோ என்னவோ சச்சின். அவர் கூறியது போல் லபுஷேன் ஆட்டம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.. ஆனால் சச்சினுக்கு இவ்வாறு கூற உரிமை இருக்கிறது.

அதாவது லபுஷேனின் பொறுமை, அல்லது லபுஷேன் எப்படி தன் பேட்டிங்கைக் கொண்டு செல்கிறார் என்பது குறித்து சச்சின் அவ்வாறு கூறியிருக்கலாம் என்பதே என் கருத்து.

லபுஷேனிடம் ரன்னுக்கான பசி இருக்கிறது. மிகவும் கடினமாக முயற்சிக்கிறார். ஆஷஸ் தொடரில் அவர் ஆடியது என்னை மிகவும் கவர்ந்தது. வித்தியாசம் ஏற்படுத்த விரும்புகிறார். நன்றாக ஆடும் அடுத்த வீரர் தானாகவே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். 12 மாதங்களுக்கு முன்பாக ஆஸ்திரேலியாவின் டாப் 26 வீரர்களுள் ஒருவராக இருந்தவர் இன்று டெஸ்ட் தரவரிசையில் 4ம் இடத்தில் இருக்கிறார் என்றால் இது ஒரு வியத்தகு உருமாற்றமே.” என்றார் ஸ்டீவ் வாஹ்.

-ஸ்போர்ட்ஸ்டார் தி இந்து

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x