Published : 17 Feb 2020 08:27 PM
Last Updated : 17 Feb 2020 08:27 PM

ஆஸி.க்கு எதிரான டி20 தொடர்: தெ.ஆ. அணிக்குத் திரும்பிய டுபிளெசிஸ், ரபாடா

கேப்டன்சியைத் துறந்த ஃபாப் டுபிளெசிஸ் மற்றும் சிறந்த வேகப்பந்து வீச்சாலர் கேகிசோ ரபாடா ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு தென் ஆப்பிரிக்க அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது குவிண்டன் டி காக் தலைமையில் டுபிளெசிஸ் ஆடுகிறார். இங்கிலாந்துக்ககு எதிரான ஒருநாள் மற்று டி20 தொடரில் ரபாடா மற்றும் டுபிளெசிசுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நன்றாக வீசி விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாலர் ஆன்ரிச் நார்ட்டியே டி20 அணியில் இடம்பெற்றுள்ளார்.

தனித்தேர்வுக்குழு தலைவர் லிண்டா ஸோண்டி கூறும்போது, “இங்கிலாந்திடம் டி20 தொடரை தோற்றோம் ஆனால் எங்கள் பேட்டிங் பிரமாதமாக இருந்தது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

இங்கிலாந்துக்கு எதிராக புதிய ரோலில் பிரமாதமாக ஆடி வரும் தெம்பா பவுமா கடைசி டி20 போட்டியில் காயமடைந்தார், எனவே அவரது தேர்வு அவரது ஸ்கேன் அறிக்கையைல் வரும் முடிவைப் பொறுத்ததே என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி ஃபிப்ரவரி 21ம் தேதி ஜொஹான்னஸ்பரில் தொடங்குகிறது, பிப்.23ம் தேதி போர்ட் எலிசபெத்திலும் பிப்26ம் தேதி கேப்டவுனிலும் போட்டிகள் நடைபெறுகின்றனர்.

தென் ஆப்பிரிக்க அணி வருமாறு: குவிண்டன் டி காக் (கேப்டன்), தெம்பா பவுமா, டுபிளெசிஸ், ஜோன் ஃபோர்ட்டுயின், ஹெய்ன்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், லுங்கி இங்கிடி, ஆன்ரிச் நோர்ட்டியே, பெலுக்வயோ, டிவைன் பிரிடோரியஸ், கேக்ஸோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, ஜோன் ஜோன் ஸ்மட்ஸ், டெல் ஸ்டெய்ன், பைட் வான் பிலியான், வான் டெர் டியூசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x