Published : 17 Feb 2020 08:12 AM
Last Updated : 17 Feb 2020 08:12 AM

ஐ லீக் கால்பந்து சென்னை சிட்டி- டிஆர்ஏயு ஆட்டம் டிரா

ஐ லீக் கால்பந்து தொடரில் சென்னை சிட்டி எப்சி, டிடிம் ரோடு அத்லெட்டிக் யூனியன் (டிஆர்ஏயு) அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

இந்த ஆட்டம் நேற்று மாலை 5 மணிக்கு இம்பாலில் உள்ள குமன் லும்பக் மைதானத்தில் நடைபெற்றது. இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை அணி 4 வெற்றி, 2 டிரா, 5 தோல்விகள் என்ற நிலையில் களமிறங்கியது. அதே நேரத்தில் டிஆர்ஏயு அணி 12 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 3 டிரா, 5 தோல்வி என்ற நிலையில் விளையாடியது.

தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர். ஆனாலும் கோல் விழாமலேயே முதல் பாதி ஆட்டம் நிறைவுற்றது. இதே நிலை 2-வது பாதியிலும் நீடித்தது. இறுதியில் ஆட்டம் கோல் போடாமலேயே டிராவில் முடிவடைந்தது.

இந்தப் போட்டியின் முடிவில் சென்னை சிட்டி எப்சி அணி 12 ஆட்டங்களில் 4 வெற்றி, 3 டிரா, 5 தோல்விகளைப் பெற்று மொத்தம் 15 புள்ளிகளை எடுத்துள்ளது. புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தை சென்னை சிட்டி எப்சி பெற்றுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x