Published : 15 Feb 2020 10:15 PM
Last Updated : 15 Feb 2020 10:15 PM

ஐபிஎல் 2020: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல் : சிஎஸ்கே அணி மோதும் போட்டிகள் தேதிகள் என்ன?

2020-ம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 போட்டியில் மார்ச் 29-ம் தேதி மும்பையில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது ரோஹித் சர்மா தலைமையிலான நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி.

13-வது ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 29-ம் தேதி தொடங்கி மே 24-ம் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.

நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 60 போட்டிகள் நடக்க உள்ளன.

முதல் போட்டி வரும் மார்ச் 29-ம் தேதி மும்பையில் வான்ஹடே மைதானத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே நடக்கிறது.

சிஎஸ்கே அணி 2-வது ஆட்டத்தில் ஏப்ரல் 2-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது.

ஏப்ரல் 6-ம் தேதி நடக்கும் 3-வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுன் சிஎஸ்கே விளையாடுகிறது.

ஏப்ரல் 11-ம் தேதி கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியுடனும், ஏப்ரல் 13-ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியுடனும் சிஎஸ்கே அணி மோதுகிறது

17-ம் தேதி பஞ்சாப் அணியுடனும், 19-ம் தேதி சன்ரைசர்ஸ் அணியுடனும், 24-ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியையும் சிஎஸ்கே எதிர்கொள்கிறது.

27-ம் தேதி நடக்கும் ஆட்டத்தில் ஆர்சிபி அணியுடனும், 30-ம்தேதி சன்ரைசர்ஸ் அணியுடனும், மே 4-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனும் சிஎஸ்கே அணி மோதுகிறது

மே 7-ம் தேதி கொல்கத்தா அணியுடனும், 10-ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியுடனும்,14-ம் தேதி ஆர்சிபி அணியுடனும் சிஎஸ்கே அணி விளையாடுகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x