Published : 14 Feb 2020 10:12 AM
Last Updated : 14 Feb 2020 10:12 AM

திறப்பு விழாவுக்கு தயாரான உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்- 1,10,000 ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான சர்தார் வல்லபாய் படேல் மைதானம் விரைவில் திறக்கப்பட உள்ளது.

குஜராத் மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் மோதிராவில் சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் அதி நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக 1,10,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டுள்ளது. இந்த மைதானம் சுமார் ரூ.800 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் உலகில் இதுவரை ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் மைதானம்தான் பெரியதாக கருதப்படுகிறது. இந்த மைதானத்தில் சுமார் 1,00,024 ரசிகர்கள் அமரலாம். அந்த வகையில் சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானம் 1,10,000 பேர் அமரக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற சாதனையை படைக்க உள்ளது சர்தார் வல்லபாய் படேல் மைதானம்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அப்போது அவர் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கக்கூடும் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மைதானத்தில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கிரிக்கெட் போட்டியை நடத்த தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

சர்தார் வல்லபாய் படேல் மைதானமானது கிரிக்கெட் மட்டும் அல்லாது பாட் மிண்டன், நீச்சல், தடகளம், குத்துச்சண்டை, கபடி, புல் தரை ஆடுகள டென்னிஸ், ஸ்குவாஸ், பில்லியர்ட்ஸ், ஹாக்கி உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளுக்கும் பெரிய உந்துதலாக இருக்கும் என கருதப்படுகிறது. ஏனெனில் இந்த விளையாட்டுகளுக்கான அகாடமிகளும் மைதானத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

தனித்துவமான அம்சமாக மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள் கொண்ட மாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இம்முறை இங்கு ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். எனினும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சர்வதேச போட்டி நடைபெறக்கூடும்.

4 லாக்கர் அறைகள்

ஐபிஎல் தொடரில் ஒரே நாளில் 2 ஆட்டங்கள் நடைபெறுவதை கருத்தில் கொண்டு வீரர்கள் தங்களது உடைமைகளை வைப்பதற்கு வசதியாக 4 லாக்கர் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மெல்பர்னைவிட அதிகம்

மோதிரா மைதானத்தின் இருக்கை களின் எண்ணிக்கை 1,10,000 ஆகும். இதன் மூலம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்ற பெருமையை பெற உள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தின் இருக்கைகளை விட மோதிரா மைதானத்தில் 10 ஆயிரம் இருக்கைகள் அதிகமாக உள்ளது.முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட 75 கார்ப்பரேட் பாக்ஸ்கள் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கார்ப்பரேட் பாக்ஸும் 25 இருக்கைகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீச்சல் குளம்

கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள் போட்டியை கண்டுகளிப்பதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட 55 கிளப் ஹவுஸ்கள் கட்டப்பட்டுள்ளது. மேலும் ஒலிம்பிக் போட்டிக்கு பயன்படுத்தக்கூடிய அளவில் பெரிய அளவிலான நீச்சல் குளம், உடற் பயிற்சி கூடம், விருந்தினர் கூடம் ஆகியவையும் உருவாக்கப்பட்டுள்ளது.சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தின் ஒட்டுமொத்த கட்டுமான செலவு சுமார் ரூ.800 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.மைதானத்தின் வெளிப்புற வளாகத்தில் 3 ஆயிரம் கார்கள், 10 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பிரதான மைதானத்தை தவிர்த்து சிறிய அளவிலான இரு மைதானங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 3 மைதானங்களிலும் வெவ்வெறு இயற்கை தன்மையுடன் கூடிய 11 ஆடுகளங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தின் ஒட்டுமொத்த கட்டுமான செலவு சுமார் ரூ.800 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

முற்றிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட 75 கார்ப்பரேட் பாக்ஸ்கள் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கார்ப்பரேட் பாக்ஸும் 25 இருக்கைகளை கொண்டதாக வடி வமைக்கப்பட்டுள்ளது.

மற்ற வசதிகள்

வீரர்களின் ஓய்வறைகளில் மாநில கலையை பிரதிபலிக்கும் வகையில் அலங்காரம்.

உள்ளரங்க பயற்சி ஆடுகளங்கள்

ஒவ்வொரு பார்வையாளர் மாடங்களிலும் உணவு விற்பனையகம்

கிரிக்கெட் பயிற்சி அகாடமி.

கால்பந்து, ஹாக்கி, கூடைப் பந்து, கபடி, குத்துச்சண்டை அகாடமிகள்.

தடகள வீரர்களுக்கான ஓடுதளம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x