

439 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் தென் ஆப்பிரிக்காவின் நம்பர் 1 டெஸ்ட் பவுலராக திகழ்ந்து வரும் டேல் ஸ்டெய்ன், தற்போது டி20 கிரிக்கெட்டிலும் தென் ஆப்பிரிக்காவின் முன்னணி பவுலராகத் திகழ்கிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜோஸ் பட்லர் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் இம்ரான் தாஹிரின் 61 விக்கெட்டுகள் சாதனையைக் கடந்து 62 விக்கெட்டுகள் எடுத்து டி20 கிரிக்கெட்டிலும் தென் ஆப்பிரிக்காவின் நமப்ர் 1 பவுலரானார் டேல் ஸ்டெய்ன்.
ஆனால் இம்ரான் தாஹிர் 35 போட்டிகளில் 61 விக்கெட்டுகளை எடுக்க டேல் ஸ்டெய்ன் தனது 45வது போட்டியில்தான் இம்ரான் தாஹிரைக் கடக்க முடிந்தது. பட்டியலில் 3வது இடத்தில் 46 விக்கெட்டுகளுடன் மோர்னி மோர்கெல் உள்ளார்.
மொத்தமாக இலங்கையின் லஷித் மலிங்கா டி20 சர்வதேசப் போட்டிகளில் 106 விக்கெட்டுகளுடன் முதலிடம் பிடிக்க, ஷாகித் அஃப்ரீடி 96 விக்கெட்டுகளுடன் 2ம் இடத்திலும் ஷாகிப் உல் ஹசன் 92 விக்கெட்டுகளுடன் 3ம் இடத்திலும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் 85 விக்கெட்டுகளுடன் 4ம் இடத்திலும் உள்ளனர்.
டேல் ஸ்டெய்னின் டெஸ்ட் சாதனை அபரிமிதமானது, 93 டெஸ்ட் போட்டிகளில் 439 விக்கெட்டுகளை எடுத்துள்ள ஸ்டெய்ன், 145 ஒருநாள் போட்டிகளில் 196 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.