Last Updated : 11 Feb, 2020 08:14 PM

 

Published : 11 Feb 2020 08:14 PM
Last Updated : 11 Feb 2020 08:14 PM

சேவாக், டிவில்லியர்ஸிடம் ஆலோசித்த டேவிட் வார்னர்: முக்கியமான முடிவெடுக்க ஆயத்தம் 

அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் ஆடுவது பற்றியும் அதனால் ஏற்படும் உடல், மன ரீதியான அழுத்தங்கள் பற்றியும் விரேந்திர சேவாக், ஏ.பி.டிவில்லியர்ஸிடம் தான் பேசியதாகத் தெரிவித்த டேவிட் வார்னர், தன் கிரிக்கெட் வாழ்க்கையின் முக்கியமான முடிவை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதாவது ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஆடி, டி20யிலிருந்து ஓய்வு பெறும் முடிவை எடுக்க டேவிட் வார்னர் ஆயத்தமாகி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது முறையாக சிறந்த வீரருக்கான ஆஸ்திரேலிய ஆலன் பார்டர் பதக்கம் வென்றார் 33 வயது டேவிட் வார்னர். ஆண்டின் சிறந்த டி20 வீரராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் டேவிட் வார்னர் கூறும் போது, “டி20 சர்வதேச போட்டிகள் பற்றி யோசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அடுத்தடுத்து உலகக்கோப்பைகள் வேறு உள்ளன.

எனவே இந்த டி20 கிரிக்கெட்டை கைவிடலாம் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. அனைத்து வடிவங்களிலும் ஆடுவது பெரிய சுமையாக உள்ளது. அனைத்து வடிவங்களிலும் ஆடுபவர்களுக்கு குட் லக், ஆனால் இது கடினமானது.

விரேந்திர சேவாக், ஏ.பி.டிவில்லியர்ஸ் போன்றவர்களிடம் இது பற்றி ஆலோசனை கேட்டேன், ஏனெனில் 3 வடிவங்களில் ஆடுவது பெரிய சவால், எனக்கு மனைவி,3 குழந்தைகள் இருக்கின்றன. எனவே சீரான முறையில் பயணத்தில் இருந்து கொண்டே இருப்பது கடினம்” என்றார்.

எனவே விரைவில் டி20 போட்டிகளிலிருந்து வார்னர் ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x