Published : 11 Feb 2020 07:27 PM
Last Updated : 11 Feb 2020 07:27 PM

நாங்கள் மோசமாக ஆடவில்லை, ஆனால் பீல்டிங் மோசம்: ஒயிட்வாஷ் குறித்து விராட் கோலி ஏமாற்றம்

சுமார் 31 ஆண்டுகளுக்குப் பிறகு நியூஸிலாந்து அணியிடம் இந்திய அணி 3-0 என்ற ஒயிட்வாஷ் தோல்வியை அடைந்து ஒருநாள் தொடரை இழந்துள்ளது, இந்திய அணியின் பந்து வீச்சு சாதாரணத்துக்கும் கீழாக இருந்தது, ஆனால் பீல்டிங் மோசம் என்கிறார் விராட் கோலி.

இன்று ஆட்டம் முடிந்த பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் விராட் கோலி கூறியதாவது:

ஸ்கோர்கள் காட்டுவது போல் ஆட்டங்கள் அவ்வளவு மோசமாக இல்லை. கோட்டை விட்ட வாய்ப்புகள்தான் முக்கியம். அவற்றைப் பற்றியிருந்தால் முடிவுகள் இவ்வளவு மோசமாக இருந்திருக்காது.

சர்வதேச கிரிக்கெட் தரத்துக்கு நம் பீல்டிங் இல்லை. பந்து வீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை. பீல்டிங்கில் முற்றிலும் மோசமாகத் திகழ்ந்தோம். மோசமாக ஆடவில்லை என்றாலும் கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டால் நாம் வெற்றிபெறத் தகுதியானவர்கள் அல்ல.

கடினமான சூழல்களிலிருந்து பேட்டிங் மீண்டு வருவது நல்ல அறிகுறி. ஆனால் பீல்டிங் செய்த விதம் பவுலிங் ஆகியவை வெற்றி பெற போதுமானதாக இல்லவே இல்லை.

நியூஸிலாந்து அணி தீவிரமாக ஆடினர், நாம் வெற்றி பெற தகுதியானவர்கள் அல்ல ஏனெனில் அதற்கான தரநிலைகளுடன் ஆடவில்லை.

டெஸ்ட்டைப் பொறுத்தவரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதால் அனைத்து போட்டிகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. நம்மிடம் பேலன்ஸான ஒரு டெஸ்ட் அணி உள்ளது. அதனால் டெஸ்ட் தொடரை வெல்ல முடியும் என்றே நம்புகிறேன். ஆனால் களத்தில் சரியான மனநிலையுடன் இறங்கி ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும், என்றார் விராட் கோலி.

தவறவிடாதீர்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x